பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆமாணாக்கர்களின் கிளர்ச்சி 95 உண்மையும் தெளிவாகப் புலனாகும். இந்த அறிவுரையை இளம் புலவர்கள் ஏற்றுக் கொண்டு கடைப்பிடிப்பார் .களாயின் அவர்கட்கு நல்ல எதிர்காலம் உண்டு. குமிழி-169 12. மாணாக்கர்களின் கிளர்ச்சி திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தில் பணி ஏற்றுக்கொண்டது பிழைப்புக்காக மட்டிலும் அன்று. பிழைப்புக்காக என் றிருந்தால் காரைக்குடிப் பணியைத் துறந்து இங்கு வந்திருக்க வேண்டியதில்லை. அறிவு வளர்ச்சிக்கும், பதவி உயர்வுக்கும்.நல்லவாய்ப்பான இடம்: சூழ்நிலை அற்புதம், திரு. சா. கணேசன், திரு. ராய, சொக்கலிங்கன் போன்ற அறிஞர்களின் கூட்டுறவு தமிழ்ச் சூழ்நிலையை மேலும்மிகுவித்தது. இந்த நல்லசூழ்நிலையை ஏன் துறக்க வேண்டும்? மூன்று நான்கு முறை சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஏதாவது பணியேற்க முயன்றேன். அக்காலத்தில் பிஎச்.டி. பட்டத்தை வற்புறுத்துவதில்லை. காரணம், பிஎச்.டி. பட்டம் பெற்றவர்களே இல்லை. டாக்டர் மு. வரதராசன் ஒருவரே பிஎச். டி. பட்டம் பெற்றவர். அவர் பச்சையப்பன் கல்லூரியில் பணியாற்றி வந்தார். நல்ல திறம் வாய்ந்த நூல்கள் எழுதி வெளியிட் டிருந்ததால் அவருக்கு நல்ல மதிப்பு இருந்தது. இத்தகைய வெளியீடுகளை மதித்து ஆசிரியர்களைத் தேர்ந் தெடுக்கும் முறையும் வழக்கத்தில் இருந்தது. அக்காலத்தில் நான் ஏழு பெரிய நூல்களை எழுதியிருந்தமையால் என் பெயர் தேர்ந்தெடுக்கப் பெற்ற குழு (Pamel) பட்டியலில் இடம் பெற்றது. அதற்குமேல் ஆதரவாளர் (God father)இல்லாமை யால் பதவி கிட்டவில்லை. இறையருளும் இல்லை என்பதே