பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

396 நினைவுக் குமிழிகள்-கி. இதற்குக் காரணம் என்பதையும் உணர்ந்தேன். எவரையும் குறை சொல்லிப் பயன் இல்லை. அவர்களெல்லாம் வெறும் கருவிகள் தாமே! இதனால் தான் திருப்பதி வந்தேன். திருப்பதி வந்த பிறகு பல்கலைக் கழகத்தில் தமிழ்த். துறையை வளர்ப்பது எப்படி? இந்த வினா அடிநாதமாக, என் உள்ளத்தில் அடிக்கடி ஒலித்துக் கொண்டிருந்தது. ஏழுமலையப்பன் திருவருளின்றி எதுவும் நடைபெற முடியாது என்ற அதிராத நம்பிக்கை யுடையவனாதலின் வாய்ப்பினை எதிர் நோக்கிக்கொண்டிருந்தேன். பல்கலைக் கழகம் இதில் சிறிதும் முயலாது என்பதை நன்கு அறிந்திருக் தேன். சென்னையில் என் பதவித் தேர்வு நடைபெற்ற போது துறை வளர்ச்சிக்கு வாய்ப்பு உண்டு" என்று துணைவேந்தர் நாயுடு அவர்கள் உறுதியளித்த போதிலும், இங்கு வந்த பிறகு நடைமுறையில் அவரிடம் துறை. வளர்ச்சிக்கான எந்தவித குறிப்பும் காண முடிய வில்லை. அவர் பல்வேறு அல்லல்கட்கும் தொல்லைகட்கும்.அதிகமாக உட்பட்டிருந்தது தெரிந்தது; எனக்குத் தெளிவாகவும். தெரிந்தது. இந்நிலையில் அவரைச் சந்தித்துப் பேசவும் வாய் எழவில்லை. அவருக்கு என்ன தொல்லைகள் இருக்கும்? இவற்றை என்னால் ஊகித்து அறியமுடியவில்லை. அவருடைய திறமையையும் தன்னலமற்ற சேவையையும் செயலாற்றும் திறமையையும் கருத்தில் கொண்டுதானே தனியாகப் பிரிந்த ஆந் திர மாநில அரசு அவரை முதல் கல்வித்துறை இயக்குநராக நியமித் தது? பின்னர் புதிதாகத் தொடங்கப் பெற்ற திருவேங்கடவன் பல்கலைக் கழகத்திற்கும் முதல் துணைவேந்தராகவும் நியமித்தது? பல்கலைக் கழகம் தொடங்கின நாள்முதல் இரவென்றும் பகலென்றும் கருதாமல் தம் தன்னல மற்ற சேவையால் ஓர் ஐந்தாண்டுக் குள் சிறந்த பல்கலைக்கழகமாகத் திகழவும் செய்தவ. ரல்லவா? சென்னைப் பல்கலைக் கழகத்தில் பல்லாண்டு