பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணாக்கர்களின் கிளர்ச்சி 97 களாக ஆட்சிக் குழு உறுப்பினராகவும், டாக்டர் ஏ.எல். முதலியார்விடுப்பில்இருந்த போதும் சில திங்கள்கள் உலக சுகாதாரக் கழகப் பணியாக வெளிநாடுகளில் இருக்கும் பொழுதெல்லாம் துணைவேந்தராகவும் பணி யாற்றிப் பெற்ற நல்ல அநுபவமெல்லாம் புதிய பல்கலைக் கழகத்தின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தியவ ரல்லவா? திருவேங்கடநாதனின் கணக்கு வழக்குகளை எல்லாம் அருள்மிகு கோவிந்தராஜ சுவாமியிடம் இருப்பது போலது திருவேங்கடவன் பல்கலைக்கழகக் கணக்குகள், பல்வேறு வளர்ச்சி முறைகள் முதலியன யாவும் இந்த கோவிந்தராஜுலு நாயுடுவின் கையில்இருக்கின்றதல்லவா? - - - - - - § 3. இப்படியெல்லாம் என் சிந்தனை ஒடத் தொடங்கியது. ஆனால் அவருக்கு எதிராகச் செயலாற்றிய சக்திகளை யும், அவருடைய குறைகளையும் என்னால் ஊகித்து அறிய முடியவில்லை. பல்கலைக் கழகத்தைப் பற்றிய உள்ளூர் அரசியலையும். (Local politics) அவருக்கு எதிராகச் செயற்பட்ட உள்ளுர் வெளியூர் பிரமுகர்களைப்பற்றியும் உசாவி அறிவதற்கும் என் மனம் துணியவில்லை. நான் முதன் முதலாகச் சந்தித்த அன்றே 'உள்ளூர் அரசியலில்’’ -குறிப்பாக ரெட்டி-நாயுடுசச்சரவில்’ (Conflict) கலந்து கொள்ளாதீதர்கள்’’-என்று எச்சரித்தாரன்றோ? ஆகவே நமக்கு ஏன் இத்தகைய வேலை? நான் காரைக் குடியிலிருந்து வந்தது இதற்காக அல்லவே? என்று என் உள் மனம்- அந்தர்யாமியாக வீ ற் றி ரு க் கு ம் ஏழுமலையான்-தொடர்ந்து எச்சரித்துக் கொண்டே இருந்தது. நானும் 'சிவனே' என்று வாளா இருந்து விட்டேன். ஒரு நாள் திடீரென்று இந்த எதிர்ப்புச் சக்திகள் ‘விசுவரூபம்’ கொண்டன. இந்தச் செயல் நான் பணியில் அமர்ந்த இரண்டாண்டுகள் கழித்து நடைபெற்றது தி-7