பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 நினைவுக் குமிழிகள்-4 என்பதாக நினைவு. அக்காலத்தில் சுமார் முப்பது கல்லூரி கள் (சித்துார், நெல்லூர், கடப்பை, கர்நூல், அனந்தப்பூர் மாவட்டங்களிலுள்ளவை) இப்பல்கலைக் கழகத்துடன் இணைந்திருந்தன. இக்கல்லூரிகளைச் சேர்ந்த மாணாக்கர் கள், பல ஆசிரியர்கள், பொது மக்கள் (சுமார் பத்தாயித் திற்கு மேற்பட்டவர்கள்) திருப்பதியில் திரண்டனர். ஒரு ஞாயிறன்று இவ்வாறு திரண்டதாக நினைவு. பிரம்மோத்சவம் (பெருவிழா) நடை பெற்றால் எப்படிக் கூட்டம் இருக்குமோ அப்படிக் கூட்டம் காணப்பட்டது. திருப்பதி-கோவிந்தராஜப் பட்டணம்- ஒரு பெரிய ஊர்: ஆனால் சிறிய பட்டணம். சென்னையிலுள்ள சிந்தாதிரிப் பேட்டை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூரில் சில பகுதிகள் கட்டங்களிருப்பன போல நெரிசலான கட்டடங்கள்; குறுக் கும்.நெடுக்குமாகச் சிறு சிறு தெருக்கள்; சந்துகள். திருப்பதி யிலுள்ள காந்திசாலைதான் பெருஞ்சாலை. நான் தீர்த்த கட்டத் தெருவின் தொடக்கத்தில் தங்கியிருந்ததால் உடனே ஓடிவந்து காந்திசாலையில் ஊர்வலமாக வந்த இக்கூட்டத்தைக் காணமுடிந்தது. எள்போட்டால் எள் இறங்காது’ என்றபடி கூட்டம் மிக நெரிசலாகக் காணப் பெற்றது. சாலையின் இருபுறமும் வேடிக்கை பார்க்கும் மக்கள் காணப்பெற்றனர்; வீட்டின் கூரைகளின் மீதும் மச்சு வீடுகளின்மீதும் மக்கட் கூட்டம் காணப்பட்டது. மூலபலம் இலங்கையில் திரண்டதை, அடங்கும் வேலைகள் அண்டத்தின் அகத்தகல் மலையும் அடங்கும் மன்னுயிர் அனைத்தும் அவ் வரைப்பிடை யவைபோல் அடங்கு மேமற்றப் பெரும்படை அரக்கர்தம் யாக்கை அடங்கு மாயவன் குறளு ருத் தன்மையின் அல்லால்." 1-கம்ப, யுத்த-மூலபலவதை-5,