பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணாக்கர்களின் கிளர்ச்சி 99 என்று வருணிப்பான் கம்பன். பெரிய அண்டத் தில் இருக்கத் தக்க கடல் மலை உயிர்கள் எல்லாம் வாமனத் திருவுருவம் கொண்ட திருமாவின் வயிற்றிலடங்கியிருந்ததுபோல மிகக் பெருந் தொகுதி யான மூலத்தானை அவ்விலங்கையினுள் அடங்கியிருந்தது என்பான். இங்ங்ணமே பல்கலைக் கழக எல்லையில் அடங்கிய கல்லூரி மாணாக்கர்கள் அனைவரும் பல பொதுமக்களும் சிறிய பட்டணமாகிய திருப்பதியில் திரண்டனரோ என்று என் மனம் எண்ணியது. ஊர்வலத்தில் கூட்டத்தின் முன்னதாக பறை மேளம், தாரை, ஊதுகொம்புகளின் முழக்கம் அமைந்தது. இதனை யடுத்து ஒப்பாரிகள், சிரிப்பு கலந்த அழுகைக்குரல்களில் பெண்ணுடை அணிந்த பல மாணாக்கர்கள் காணப் பெற்றனர். சிலர் பெரிய கோணிகளில் பொரிகள்,கடலைப் பருப்புகள், சல்லிக்காசுகள் கலந்த கலவையைத் தூவிக் கொண்டு வந்தனர். இவர்களைத் தொடர்ந்து சிறுசிறு கூட்டமாகச் சில மாணாக்கர்கள் கோவிந்தன் போய் விட்டாரே!கோவிந்தம்மாவும் மறைந்துவிட்டாரே!ஐயோ, ஐயோ ஐயையோ!' என்று தெலுங்கில் அலறிய வண்ணம் சென்றனர். இவற்றைத்தவிர, கும்மி, கோலாட்டம். சிலம்பவிளையாட்டுகள் நடத்திய வண்ணம் சில கூட்டங் கள் தொடர்ந்தன. இவற்றைத் தொடர்ந்து மக்கள் வேள்ளத்தில் புன்முறுவல்கொண்ட அழுகை முகங்கள் காணப்பட்டன. ஒருடாடையில் கோவிந்தராஜுலுவான” கொடும்பாவியும், தொடர்ந்து மற்றொரு t_iss of - யில், கோவிந்தம்மாவின்’ கொடும்பாவியும் штsoя тѣ 2. கோவிந்தன்' என்று துணைவேந்தர் கோவிந்த ராஜுலு நாயுடுவையும் கோவிந்தம்மா' என்பது பதுமாவதி மகளிர்க் கல்லூரி முதல்வர் ஆட்சிக் ராசேசுவரி அம்மையாரையும் குறிக்கும் (ஆட்சிக் குழுஉறுப்பினர்).