பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 நினைவுக் குமிழிகள்-தி கர்களால் சுமந்த வண்ணம் சென்றன, அடுத்து மக்கள் திரள். இவ்வாறு ஊர்வலம் கோலாகலமாகச் சேன்றது. துணைவேந்தரின் எதிர்ப்பியக்கத்தின் விசுவரூபம் இந்த வடிவம் கொண்டது. இத்தகைய கூட்டத்தை பார்த்து, கூட்டம் சென்ற பிறகு அறைக்குப் போய்விட்டேன். மக்களாட்சி நடைபெறும் & fᎢ © : மல்லவா? எதிர்ப்பும் பாராட்டும் இப்படித்தான் இருக்கும். போதும்! பாராட்டுத்தலை விட எதிர்ப்புதான் பார்ப்போரின் கவனத்தை அதிகமாகக் கவரும் என்பதை, நோல் கண்டேன். இந்தக் கூட்ட ஊர்வலம் இறுதியில் சுடுகாட்டிற்குச் சென்று 'கோவிந்தனுக்கும்’ கோவிந்தம்மாவுக்கும்’ ஈமச்சடங்குகளையெல்லாம் முறைப்படி செய்து இரண்டு 'கொடும்பாவிகளையும் ஒரே படுக்கையில் வைத்துத் தீமூட்டினபிறகு கலைந்தது என்பதை அறிந்தேன். ஏன் இப்படி ஒன்றின்மேல் ஒன்றாக வைத்துத் தீமூட்டினர் என்பது பற்றிப் பலர் பல வாறாகப் பேசிக் கொண்டதை ஈண்டுக்குறிப்பிடவில்லை. அவை எனக்கு சொல் லொணாத நாணத்தையும் வருத்தத்தையும் விளை வித்தன. இத்தகைய எதிர்ப்புகளுக்குக் காரணம் என்ன என்பதைப் பற்றிப் பலர் பலவாறாகப் பேசிக்கொண்ட செய்திகளில் என் காதில் விழுந்தவை: "பல்கலைக்கழக நியமனங்களில் எல்லாமட்டங்களிலும் பலிஜ வகுப்பு நாயுடு மார்களுக்கு முதலிடம் தந்தார்; தகுதி திறமை களைக் காற்றில் பறக்கவிட்டார். தோட்டப்பணியாளர் (Gardener) குற்றேவலர் (peom) முதல் பேராசிரியர் நியமனம்வரை பலிஜ வகுப்பினருக்கே முதலிடம் அளித்து வந்தார். கல்லூரி அலுவலக மேலாளர் பதவிக்குக் கூட பெங்களூரில் ஒய்வு பெற்ற கோமாளி ஒருவரைக் கொணர்ந்தார். பேராசிரியர் பதவிக்குத் தகுதியுள்ள