பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணாக்கர்களின் கிளர்ச்சி I & I வரைக் கூட பேச்சால் மடக்கி துணைப் பேராசிரியராக நியமனம் செய்தார் எந்தப் பதவிக்கு மனுச் செய்தாலும் அதற்கு அடுத்த கீழுள்ள பதவியையே அளித்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆண்டில் பெரும்பகுதிக் காலம் திருப்பதியில் தங்குவதே இல்லை; சென்னையில் தான் வாழ்ந்து வந்தார். தேவஸ்தான நிர்வாக அதிகாரி யைக் கைக்குள் போட்டுக் கொண்டு தேவஸ்தான நியமனங்களிலும் பலிஜவகுப்பினரையே இடம் பெறச் செய்தார். இன்னோரன்ன குறைகள். எவர் பதவியி லிருந்தாலும் இப்படி இட்டுக் கூறுவது சனநாயக மரபாகி" விட்டது! இதில் சிறிதளவாவது உண்மையும் இருக்கலாம். இக்கிளர்ச்சி நடைபெற்ற சில நாட்களுக்கு முன்னதாக சென்னை மாநிலம் மாண்புமிகு கல்வி-நிதி அமைச்சர் திரு சி. சுப்பிரமணியம் திருப்பதி வந்திருந்தார் . தேவஸ்தான விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்ததை அறிந்து அவரைச் சந்தித்து யான் அழகப்ப வள்ளல் பயிற்சிக் கல்லூரியில் பணியாற்றியதை அறிந்த வராதலால்' சென்னை மாநில அரசு பிற மாநிலங்களில் தமிழ் வளர்ச்சிக்கென மானியம் வழங்கும் கொள்கையை நம்பியே திருப்பதியில் தமிழ் எம். ஏ., பிஎச். டி வரை வளர்ப்பதற்கென்றே வந்ததையும் தெரிவித்து யான் வாழ்க்கைப் பணியாக (Life Mission) மேற்கொண்ட மைக்கு நிதிவழங்கி உதவுமாறு வேண்டினேன். அவரும் என்னை இன் முகத்துடன் வரவேற்று அரைமணி நேரம் 3. அப்பொழுது தமிழ்நாடுஎன்று பெயர்சூட்டப் பெற வில்லை. தி.மு.க. ஆட்சியில் அண்ணாதலைமை யில்தான் இப்பெயர்சூட்டல் செய்யப் பெற்றது. 4. வள்ளல் அழகப்பர் திருநாடு அலங்கரித்த பிறகு வள்ளல் கண்ட அறநிலையங்கள் சரியாக இயங்கு வதற்குச் சில ஆண்டுகள் அறக்கட்டளை நிறுவனத்திற்குத் தலைவராக இருந்தார்.