பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

叉é多 நினைவுக் குமிழிகள்-4 பேசிக்கொண்டிருந்தார். யான் தமிழ் வளர்ச்சிக்கென்றே பேராசிரியர் பதவியைத்துறந்து - அதுவும் ஒரு. நல்ல நிறுவனத்தின் கீழ்இயங்கும் புகழ்பெற்ற கல்லூரியிலுள்ள பதவியைத் துறந்து- வந்தமையைப் பாராட்டி என் தியாகத்திற்கு வியந்தார். மானியத்திற்கு விண்ணப்பம் அனுப்புமாறும் பணித்தார். அப்போதிருந்த சூழ்நிலையில் பல்கலைக் கழகத்தை விண்ணப்பம் அனுப்பச் செய்வதென்பது திருவேங்கட மலையை அடைப்பது போன்ற முயற்சி என்பதை நன்கு அறிந்திருந்தேன். ஆகவே, அவ்வழியில் முயலாமல், நானே அமைச்சர் பெயருக்கு தமிழில் ஒரு விண்ணப்பம் அனுப்பினேன். அனுப்பின சின்னாட்களிலேயே அரசிடமிருந்து மறுமொழி வத்தது. கல்வித் துறை துணைச் செயலர் வி. சங்கரன் கையெழுத்திட்டு 'உங்கள் விண்ணப்பத்தை பல்கலைக் கழகத்தின் வழியாக அனுப்புங்கள்; அல்லது பல்கலைக் கழகத்தையே விண்ணப்பம் அனுப்புமாறு செய்யுங்கள்’ என்று மறுமொழி வந்தது. பல்லாண்டுகள் நிர்வாகத்தில் உழைத்தவனாதலால் இப்படித்தான் மறுமொழி வரும் என்பதை நன்கு அறிவேன். இப்படி வரும் கடிதத்தைத் துணைவேந்த ருக்குக் காட்டிப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே என் திட்டம். இப்படி எண்ணிக் கொண்டிருந்த பொழுதுதான் துணைவேந்தருக்கு எதிராக எரிமலை வெடித்தது போல் மேற்குறிப்பிட்ட கிளர்ச்சி எழுந்தது. தமிழக அரசிடமிருந்து வந்த கடிதத்தைத் தக்கமுறையில் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லையே என்று மனங்கவன்றேன். பைந்தமிழ்ப் பின்சென்ற பசுங் கொண்டலாகிய ஏழுமலையானும் என் முயற்சிக்குக் கைகொடுக்கவில்லையே என்று என்னையே நொந்து கொண்டேன். ஆனால் திக்கற்றவருக்குத் தெய்வம் துணை நிற்கும்’ என்ற முதுமொழியில் அதிராத நம்பிக்கை இருந்தது. இந்நிலையில்,