பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணாக்கர்களின் கிளர்ச்சி 103 வேண்டத் தக்க தறிவோய்நீ: வேண்ட முழுதும் தருவோய்நீ: வேண்டும் அயன்மாற்கு அறியோய்நீ; வேண்டி என்னைப் பணிகொண்டாய்: வேண்டி நீயா தருள்செய்தாய்: யானும் அதுவே வேண்டினல்லால் வேண்டும் பரிசொன் றுண்டென்னில் அதுவும் உன்றன விருப்பன்றே. * என்ற மணிவாசகப் பெருமானின் திருவாக்கும் என் மனத்தில் எழுந்து மேலும் என் நம்பிக்கைக்கு உரம் அளித்தது. இந் நிலையில் துணைவேந்தரின் இரண்டாவது சுற்றின் பதவிக்காலமூம் நெருங்கிக் கொண்டிருந்தது. இன்னும் சில திங்கள்தான் இருந்தன. இதற்குள் எப்படியும் அரசு கடிதத்துடன் பார்த்து விட வேண்டும் என்று உறுதி கொண்டேன். ஒருநாள் சந்தித்துத் துறைவளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்றும், மானியம் பெறுவதற்குச் சென்னை மாநில அரசுக்கு விண்ணப்பிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் வேண்டினேன். பலன் கிட்டாது என்பதை நன்கு அறிவேன். காரணம் துணைவேந்தருக்குத் தமிழ் வளர்ச்சியை விரும்பாதவர் என்பது அல்ல; என்னைப் போலவே தமிழார்வம் உள்ளவர், ஆனால் சூழ்நிலையும் மனம் குலைந்த நிலையும், மிஸ்டர் ரெட்டியார், கவலைப்படாதீர்கள். தமிழ்த்துறை வேங்கடவன் பல்கலைக் கழகத்தில் கட்டாயம் ஏற்படும்: நான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஏற்படும். ஏழுமலையான் திருவருள் இதற்கு இல்லாமற் போகாது. நான் சென்னை செல்லும்போது ம .ா ண் பு மி கு முதலமைச்சர் திரு. பக்தவத்சலத்தைப் பார்த்து" ஆவன 5. திருவா. குழைத்தபத் து-6