பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翼镑4 நினைவுக் குமிழிகள்-4 செய்வேன்' என்று உற்சாகமூட்டினார். மூன்றாவது சுற்றுப் பதவிக்காக பகீரதப் பிரயத்தனம் செய்தும் பயன் இல்லை. இந்த எதிர்ப்புச் சூழ்நிலையில் எப்படிக் கிடைக்கும்? எனவே, திருப்பதியைவிட்டு சென்னைக்கு ப் போய்விட்டார். சென்னையிலிருந்தாலும் என்மீது அளவு கடந்த அன்பு காட்டியது பல நிகழ்ச்சிகளால் அறிய முடிந்தது. ஆனால் இவர் துணைவேந்தராக இருந்த காலத்தில் தமிழ் வளர்ச்சிக்கான விதை" கூட ஊன்ற முடியாது போயிற்று அடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி எடுத்த கருமங்கள் ஆகா: -தொடுத் த உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம் பருவத்தால் அன்றிப் பழா." என்ற ஒளவையார் வாக்கு பொய்த்தா போகும்? தமிழ்த் துறை விரிய ஏற்பாடு செய்தால் தம்மைத் தமிழர்” என்று சாற்றிய பட்டம் உறுதிப்பட்டு விடுமோ? என்று அஞ்சியே துறைவிரிய ஏற்பாடு செய்யவில்லையோ? என்ற ஐயம் இப்போது என் உள்ளத்தில் முகிழ்க்கின்றது! 6. திரு சி. சுப்பிரமணியம் நடுவணரசில் அமைச்ச ராகி விட்டார். காமராசர் பதவிவிலகினமையால் திரு.பக்தவத்சலம் அமைச்சரவை ஏற்பட்டு விட்டது (1964). 7. வாக்குண்டாம்-5.