பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமிழி-169 13. கிளர்ச்சிக்குக் காரணம்-ஓர் ஆய்வு கோவிந்தராஜுலு நாயுடு அவர்கள் பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தர். அப்பொழுது திருவேங்கடவன் பல்கலைக் கழகத் துணைவேந்தரின் பதவிக்காலம் ஐந்தாண்டுகளாக இருந்தது. 1954-இல் தொடங்கப் பெற்ற இந்தப் பல்கலைக் கழகத்தில் இவர் பத்தாண்டுக் காலம் மிக அற்புதமாகப் பணியாற்றி வந்தார். நான் நான்காண்டு காலம்தான் (1960-84) இவர் தலைமையில் பணியாற்றும் பேறு பெற்றிருந்தேன். சென்னைப் பல்கலைக் கழகத்தில் மருத்துவக் கல்லூரியில் ஒய்வு பெற்ற பிறகு கால் நூற்றாண்டுக் காலத்திற்கு மேல் துணைவேந்தராகப் பணியாற்றிய டாக்டர் . இலக்குமண சாமி முதலியாரின் நெருங்கிய நண்பர்; அணுக்கத் தொண்டர். டாக்டர் முதலியாரின் பதவிக் காலத்தில் பல்லாண்டுகள் சென்னைப் பல்கலைக் கழக ஆட்சிக் குழுவில் (Syndicate) உறுப்பினராகப் பணியாற்றியவர்: டாக்டர் முதலியாருக்கு வலக்கை போல் நின்று உதவியவர். திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தில் இரண்டு சுற்றுத் துணைவேந்தராகப் பணியாற்றிய டாக்டர் டி. சகந்நாத ரெட்டிஇவரை டாக்டர் ஏ.எல். முதலியாரின் கையடக்கப் L'Étouy" (Pocket Edition of Dr. A. L. (p.56%urti) என்றே குறிப்பிடுவார். இவருடைய செயல்திறனை அடிக்கடிக் குறிப்பிட்டுப் பாராட்டுவதுண்டு. பேராசிரியர் நாயுடு அவர்கள் சட்டக் கல்லூரியில் பல்லாண்டுகள் கட்டப் பேராசிரியராகப் பணியாற்றியபொழுது சட்டக் கல்லூரி மாணாக்கர்களிடம் பெரும் புகழ் பெற்றிருந்தார்: மெக்காலே எழுதிய 'இந்திய குற்றத்துறைச் சட்டத்