பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xii தமிழ் வளர்ச்சிக்கு எதிராய் வந்த தடைக்கற்களை யெல்லாம் பேராசிரியர் அவர்கள் தம் தடந்தோளால் தாங்கிய நிகழ்ச்சிகள் குமிழிகள் 182. 184 இல் நன்கு சித்திரிக்கப் பெற்றுள்ளன . அண்மையில் (1989) திருவேங்கடவன் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைப் பேராசி ரியரின் இருக்கைக்குத் தமிழக அரசு வழங்கும் மானியம், தொடர்ந்து வழங்கப் பெறுவதற்கும், அம்மானியத் தொகை உயர்த்தப்படுவதற்கும் பேராசிரியர் அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் பொன்னேடுகளில் பொறிக்கத் தக்கன . பேராசிரியர் அவர்கள் தமிழ்த் தொண்டை துறை உருவாக்கினதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. மொழி வழி மாநிலங்கள் பிரிந்த வின் வடவேங்கடப் பகுதிகளில் தமிழ் கொஞ்சம் கொஞ்சமாகச் சாவதைப் பார்த்து, இப் பகுதிகளில் எப்படியாவது தமிழ் மக்கள் தமிழ் உணர் வோடு வாழ வேண்டும் என எண்ணி பாக்காலா, சித்துர், திருப்பதி, புத்துார், நகரி, குந்தக்கல் ஆகியவிடங்களில் படிப்படியாகத் தமிழ்ச் சங்கங்களை ஏற்படுத்தி அங்குள்ள தமிழர்களை ஊக்குவித்திருக்கிறார். பேராசிரியர் அவர்கள் இத்தமிழ்ச் சங்கங்களைத் தமக்குச் சிறந்த இலக்கிய மேடைகளாகப் பயன்படுத்திக் கொண்டதோடு நில்லாது, இவைகளைத் திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை ஏற் படத் துணைக் கருவி களாகவும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். பலவிடங் களில் சிதறிக் கிடந்த உறுப்பினர்களை ஒன்று சேர்த்தல், தாமே நேரிற் சென்று நிர்வாகச் சபையைக் கூட்டச் செய்தல், தீர்மானங்களைத் தட்டச்சு செய்து அவற்றைத் தமிழக அரசு, தமிழ் வளர்ச்சி இயக்கம், ஆந்திர அரசு முதலான இடங்களுக்கு அனுப்பல் முதலிய சிறந்த பணிகளை இத் தமிழ்ச் சங்கங்களில் செய்திருப்பதோடு, நல்லறிஞர் பலரை அழைத்துச் சிறந்த பல சொற் போழிவுகளை ஆற்றுமாறும் செய்திருக்கிறார். இவ்வாறு