பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I Ꮽ Ꮾ நினைவுக் குமிழிகள்-4 தொகுதியை (Indian Penal Code) இலக்கியம்போல் சுவையாகக் கற்பிப்பார் என்பதைச் சட்டக் கல்லூரியில் பயின்ற என் நண்பர்கள் பலர்மூலம் கேள்விப்பட்டதுண்டு. பின்னர் பேராசிரியர் நாயுடு அவர்கள் சட்டக்கல்வி இயக்குநராக உயர்ந்தார். அடுத்து சென்னை மாநிலக் கல்வி இயக்குநர் பதவி இவரை வந்தடைந்தது இக்காலத்தில் ஆந்திரம் தனிமாநிலமாகப் பிரிந்தது; சென்னை நகர் ஆந்திரத்திற்கா? தமிழகத்திற்கா? என்ற வாதமும் எழுந்தது. தமிழகத்தினரும் புதிதாகப் பிரிந்த ஆந்திரத்தைச் சேர்ந்தவர்களில் சிலரும் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர். நம் அருமை இராஜாஜி அவர்கள்- சாணக்கியர் என்ற அரசியல் வல்லுநரின் மறுபிறவிபோன்றவர்-தென்காசி வழக்காகத்திருப்பதியை ஆந்திரத்திற்கு விட்டுக் கொடுத்து சென்னையைத் தமிழகத்துக்கென்று நிலை நிறுத்திக் கொண்டார். இதில் இராஜாஜியின் பங்கு பெரிது; மிகப் பெரிது; தமிழக மக்கள் என்றும் நினைவிலிருத்தக் கூடியது. ஆந்திரம் தனியாகப் பிரிந்த பொழுது பேராசிரியர் நாயுடு அவர்களின் திறமை உலகறிந்ததாதலால், ஆந்திரம் இவரை தம் மாநிலக் கல்வி இயக்குநராக்கிக் கொண்டது; மேலவை உறுப்பினராகவும் (M. L. C.) நியமித்துக்கொண்டது. 1954 இல் திருவேங்கடவன் பல்கலைக்கழகம் நிறுவப்பெற்ற பொழுது அதன் முதல் துணைவேந்தராகவும் தேர்ந்தெடுத்துக் கொண்டது. சென்னையில் பல்லாண்டுகள் கல்வி இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற திரு. டி. சதாசிவ ரெட்டிக்குப் (இவர் அனந்தர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் போக இருந்த பதவி இவர்தலையில் விழுந்தது; திரு. டி. சதாசிவ ரெட்டி (டி. எஸ். ரெட்டி என்ற சுருக்கமான பெயரால் புகழ் பெற்றவர்) உஸ்மானியப் பல்கலைக்கழகத்துணை வேந்தரானார்.