பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளர்ச்சிக்குக் காரணம்-ஒர் ஆய்வு ፲ 0 ? இவ்வளவு புகழ் பெற்ற இப்பெருமகனாருக்கு எதிர்ப்புச் சக்திகள் கிளர்ந்தெழுந்தமைக்குக் காரணம் என்ன? உலகியவில் மக்கள் அவரவர் அறிவிற்கேற்றவாறு, அநுபவத்திற்கேற்றவாறு பல காரணங்களைக் கூறுவர். சிலர் அவரவர் சார்ந்திருக்கும் சாதிக்கேற்றவாறும், அரசியல் கட்சிக்கேற்றவாறும் கூறுவர். ஆனால் என் அநுபவத்திற்கேற்ப என் மனத்தில் படுவது ஆணவ மலத்தின் செயல் என்பது. சகல நிலையில் மாயை கன்மங்கள் செயற்படுவதால், உயிரைப் பற்றியுள்ள ஆணவ மலத்தின் ஆற்றல் சிறிது அடங்கப் பெற்றிருக்கும். இதனால் உயிர் பருப்பொருள்களைக் காணும் காட்சியை மறைக்காமல் நுண்பொருள்களைக் காணும் காட்சியை மட்டும் அது மறைத்து நிற்கும். பேராசிரியர் நாயுடு அவர்கள் (துணைவேந்தர்) சகல நிலையில் இருந்தவராகக் கருதலாம். இந்நிலையிலுள்ளவர்கட்கு துண்பொருள் களைக் காணும் ஆற்றல் இன்மையால், பருப்பொருள் களின் இயல்பும் உள்ளவாறு விளங்காது; ஒன்று மற்றொன் றாகவே தோன்றும். அதாவது, நிலையாத பொருளே நிலைத்த பொருள் போலவும், பின்னர் துன்பத்தை விளை விக்கக் கூடிய பேச்சு, செயல் முதலியவை அப்போது இன்பம் பயப்பன போலவும் மாறித் தோன்றும். இந்நிலையை இருளில் இருந்த பொழுது ஒன்றையுமே பார்க்க இயலாதிருந்த ஒருவருக்கு விளக்கு வந்த பொழுது பருப்பொருள்கள் விளக்கமாகவும்,துண்பொருள்கள் விளங் காமலும், பொருள்களின் வண்ணமும்வடிவமும் உள்ளவாறு 1. விஞ்ஞானகலர் , பிரளயாகலர், சகலர் என்ற மூவகை உயிர்களில் விஞ்ஞானகலர் ஒரு மலம் உடையவர்கள்; பிரளயாகலர் இரு மலம் உடைய வர்கள்; சகலர் மூன்று மலம் உடைய உயிர்கள் . சகல நிலையில் உயிர் பெரிய பெரிய பொருளை அறிய மாட்டாது: சிறிய பொருளையே பெரிதாக எண்ணி மயங்கும் (சைவசித்தாந்தம்)