பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 68 நினைவுக் குமிழிகள்-4, விளங்காமல் மாறித் தோன்றுதலும் உடைய நிலையைப் போல்வது என்று விளக்கி வைக்கலாம். இவ்வாறு பொருள்கள் மாறுபட்டுத் தோன்றுதல் அங்கும் இருளி னால் விளைவதேயன்றி, விளக்கினால் விளைவதன்று. ஏனெனில், விளக்கு பொருள்களை விளக்க வந்ததேயன்றி, மறைக்க வந்தது அன்று: மறைப்பது எப்போதும் இருளே. அதுபோலவே, சகல நிலையில் இருந்த பேராசிரியர் நாயுடு அவர்கட்கு மெய்யுணர்வு தோன்றாமல் விபரீத உணர்வு தோன்றினதும் மாயை, கன்மங்களால் விளைந்த தன்று; ஆணவத்தால் விளைந்ததேயாகும். ஆணவத்தின் ஆற்றல் சகல நிலையில் விபரீத ஞானத்தை மயக்க உணர்வை-உண்டாக்கும் பான்மையது. இப்போது அதன் ஆற்றல் அதோ நியாமிகா சக்தி-கீழ் நோக்கிச் செல்லும் சக்தி என வழங்கப் பெறும்.பேராசிரியர் நாயுடு அவர்கள் திருப்பதி மருத்துவக் கல்லூரி ஆண்டுவிழா ஒன்றில் பேசிய பொழுது ஒருவர் பதவியிலிருக்கும் பொழுது அவர் சாதி யினருக்குச் சலுகை, நியமனம் முதலியனவற்றை வழங்குதல் குற்றம் இல்லை என்று பேசி விட்டார். இப்பேச்சு நான்கும் அறிந்த நாயுடு அவர்க்கு மயக்க உணர்வால் விளைந்தது என்று கருதுவது பொருத்தமாகும். தீவினைப் பயன் முற்றிய நிலையிலிருக்கும்பொழுது அது பழுத்துப் பயன் விளைவதற்கு இப்பேச்சு போதாதா? ஏற்கெனவே "சாதிப்பித்தர்', 'தான்றோன்றி, சனநாயக மரபை அறியாத சர்வாதிகாரி என்றெல்லாம் பெயர்கள் சூட்டிப் பிரசார பலத்தால் பதற்ற நிலைக்கு உள்ளாகி இருக்கும் துணைவேந்தருக்கு எதிராக எரிமலை’ வெடித்தது வியப்பன்று. அப்போது துணைவேந்தர் மேலவை உறுப்பினராகவும் இருந்தமையால் எதிர்கட்சி உறுப்பினர்களும் ஆளும் கட்சி உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து இவரைப் பேரவைக் கூட்டமொன்றில் இவ்வாறு பேசியமைக்கு மன்னிப்பும் கோர வைத்து அவமானப் படுத்தினர். இச்சமயத்தில்,