பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளர்ச்சிக்குக் காரணம்-ஓர் ஆய்வு 1 09 பொல்லாத சொல்லி மறைந்தொழுகும் பேதைதன் சொல்லாலே தன்னைத் துயர்ப்படுக்கும்--நல்லாய்! மணலுள் முழுகி மறைந்து கிடக்கும் துனலுந்தன் வாயால் கெடும்,' (நுனல்-தவளை) என்ற பழமொழியின் உண்மையும் மனத்தில் எழுகின்றது. ஆணவமலத்தின் மறைப்பாற்றலால் அறிவு மயங்கப் பெற்று நல்லவர், வல்லவர், செயல் திறம் மிக்கவர்" இழிவுக்கும் ஆளானார். இவர்தம் எதிர்காலமும் கேட்டொழிந்தது. சில சமயங்களில் ஏதாவது நிகழ்ச்சிகளில் பேசும் பொழுது சிறிது ஆணவத்துடன் இவர் பேசுவதும் உண்டு. பணபலம், அதிகாரபலம் உள்ளவர்கட்குச் சில சமயம் "ஆங்காரம் முளைப்பதும் உண்டு. இந்த ஆங்காரம்தான்’ இவரை அடக்கமின்றிப் பேசச் செய்ததோ என்று கூட நினைக்கத் தோன்றுகின்றது. கெடுமதி கண்ணுக்குத் தோன்றாதல்லவா? இவ்விடத்தில் தாயுமான அடிகளின், "ஆங்கார மானகுல வேடவெப் பேய் பாழ்த்த ஆணவத் தினும்வ விதுகாண்; அறிவினை மயக்கிடும்: நடு அறிய வொட்டாது; யாதொன்று தொடினும் அதுவாய்த் தாங்காது மொழிபேசும்; அரிகரப் பிரமாதி தம்மொடு சமான மென்னும்: தடையற்ற தேரில்அஞ் சுருவாணி போலவே தன்னில்அசை யாது நிற்கும்’ என்ற வாக்கு என் மனத்தில் குமிழியிடுகின்றது: சிந்தித்து அசைபோட வைக்கின்றது. என்னையும் செயலில் நெறிப் 2. பழமொழி-செய். 114 3. தாயுமான அடிகள்-மெளனகுரு மகிமை-9