பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 1 0 நினைவுக் குமிழிகள்.4 படுத்துகின்றது. பிறர் வாழ்க்கையில் நேரிடும் இன்பதுன்பு நிகழ்ச்சிகள், அவற்றின் விளைவுகள் நமக்கு வழிகாட்டி களாக நின்று உதவுவதும் நம் வினைப்பயனே என்றும் என் மனம் எண்ணுகின்றது. குமிழி-170 14. நன்கொடை நூல்கள் தேர்வு சென்னை (மயிலாப்பூரிலுள்ள) பெண்ணாத்துரர் கப்பிரமணிய அய்யர் உயர்நிலைப்பள்ளித் (பி. எஸ். உயர் நிலைப்பள்ளி) தலைமைத் தமிழாசிரியர் திரு. துரைசாமி அய்யர் என்பவர் பெரும் புலவர். டாக்டர் உ. வே. சாமிநாதய்யருடன் தொடர்புடையவர். அக்காலத்தில் கல்வியறிவாளர்களிடையே பெருமதிப்புடன் திகழ்ந்தவர். இவர்தம் காலத்தில் சேமித்து வைத்த அரிய நூல்கள் இவர் வீட்டு நூலகத்தில் ஏராளமாக இருந்தன. இவர் தம் இருகுமாரர்களும் வேறு பெரிய அலுவல்களில் சேர்ந்து விட்டமையால் இந்த நூலகம் போற்றுவாரின்றிக் கிடந்தது. இவர்தம் குமாரர்கள் இருவரும் இந்த வீட்டு நூலகத்தைப் புதிதாகத் தொடங்கப் பெற்ற திரு வேங்கடவன் பல்கலைக் கழகத்தில் சேர்ப்பிக்க எண்ணித் துணைவேந்தர் பேராசிரியர் எஸ். கோவிந்தராஜுலு நாயுடுக்கு எழுதினார்கள். ஒருநாள் துணைவேந்தர் தம்மை வந்து காணுமாறு ஆள்விட்டனுப்பினார். நானும் துணைவேந்தர் அறைக்குச் சென்று அவரைக் கண்டேன். அப்போது பல்கலைக் கழகம் தேவஸ்தானத்தின் கீழிருந்த பதுமாவதி மகளிர்க் கல்லூரிக் கட்டடத்தில் இருந்தது. கீழ்