பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன்கொடை நூல்கள் தேர்வு I 1 1 உள்ளபகுதிகளில் பல்கலைக்கழக அலுவலகமும் மேல் மாடி யில் பதுமாவதி மகளிர்க் கல்லூரியும் இயங்கி வந்தன. "மிஸ்டர். ரெட்டியார், சென்னை துரைசாமி அய்யரின் குமாரர்கள் தம் தந்தையாரின் நூலகத்தை நம் பல்கலைக் கழகத்திற்குத் தருவதாக எழுதியிருக்கின்றார் கள் உயர்நிலைப்பள்ளித் தமிழாசிரியராதலால் பாடபுத்தகக் குப்பை நிறைய இருக்கும். அவற்றை நீக்கி விட்டுத் தரமான உயர்ந்த இலக்கண இலக்கியங்களை மட்டிலும் பொறுக்கி எடுத்துக் கொண்டு வாருங்கள். பதிவாளரிடமிருந்து இது பற்றிக் கடிதம் வரும்’ என்று சொன்னார் . நான் கடிதத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். இது பற்றி முதல்வர் பேராசிரியர் டி. ஏ. புருடோத்தம் அவர்களிடமும் சொல்லியிருந்திருப்பார் போலும், அவர் தம் துறையிலுள்ள திரு டி. இ. வீரராகவன் என்ற விரிவுரையாளரை இப்பணிக்கு அனுப்பலாம் என்று எண்ணிப் பதிவாளருக்கு அவர் பெயரைப் பரிந்துரைத்துக் குறிப்பு அனுப்பி யிருந்தார். அப்போது பதிவாளராக இருந்தவர் திரு. இராமாநுசராவ் காயுடு என்பவர். துணைவேந்தர் பதிவாளரிடம் என்னை இப்பணிக்கு அனுப்புமாறு சொல்லி இருந்ததாக அறிந்தேன். முதல்வர் குறிப்பு வேறுவிதமாக இருந்தது கண்டு அவர் வியப்பெய்தினார். முதல்வர், துணைவேந்தர், பதிவாளர், திரு. டி. இ. வீரராகவன் ஆகிய நால்வரும் பலிஜ வகுப்பைச் சேர்ந்த வர்கள். துணைவேந்தர் பலிஜ வகுப்பினருக்கு அதிக ஆதரவு தந்து வருவது திருப்பதியில் எல்லோரும் நன்கு அறிந்த செய்தி. ஒருசமயம் திரு. டி. இ. வீரராகவனிடம் உரையாடிக் கொண்டிருந்தபோது தான் சென்னை சென்று தமிழ் நூல்களைக் கொணர வேண்டியிருக்கும் என்று முதல்வர் உரைத்ததாக என்னிடம் சொன்னார். ஆனால் அவர் என்னிடம் நீங்கள் அப்பணிக்குப் போய்வருவது தான் சரி, நூல்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டுவருவ