பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 12 நினைவுக் குமிழிகள்-4 தில் நீங்கள்தான் தகுதியுடையவர்கள்' என்றார். நான் அங்குப் பணியிலிருக்கும்போதுதான் தமிழ்ப் புத்தகங் களைப்பொறுக்கி எடுத்து வரும் பொறுப்பிற்குப் போவது சரியன்று என்று கருதினதை அவர் பேச்சிலிருந்து அறிந்: தேன். திரு. டி. இ. வீரராகவன் பரந்த நோக்கமுடையவர். தமக்குப் பொருத்தமில்லாத பணியை ஏற்றுக்கொள்ளார். ஆனால் திரு. டி. இ. வீரராகவனை அனுப்பித் தான் பலிஜ. வகுப்பினரிடம் அக்கறை காட்டுபவன் என்பதைத் துணைவேந்தர் அறியும்படிச் செய்ய வேண்டும் என்று பேராசிரியர் டி. ஏ. புருஷோத்தம் முயன்றிருக்க வேண்டும். என்று என்னால் ஊகம் செய்யமுடிகின்றது. ஆனால் முதல்வர் அனுப்பிய குறிப்பின்படி பல்கலைக்கழகம் திரு. டி. இ. வீரராகவனை அனுப்பவில்லை. என்னைத்தான் அனுப்பியது. திரு. துரைசாமி அய்யர் வீடு கெளடியாமடச்சாலை யருகிலுள்ள இலட்சுமிபுரத்தில் இருந்தது. அதை விசாரித்துக் கொண்டு அங்குச் சென்றுவிட்டு நூலகத்தை. நோட்டம் இட்டேன். திரு. துரைசாமி அய்யர் மறைந்து ஒரு சில ஆண்டுகள் ஆனபடியால் நூல்களில் சில நல்ல முறையில் அடுக்கப் பெற்றிருந்தன. பெரும்பாலான நூல் கள் குப்பைபோல் குவிந்து கிடந்தன. சில ஆண்டுகள் நூல் கள் இருந்த அறையில் ஆள் நடமாட்டமே இல்லா திருந்ததை அறிய முடிந்தது. திரு. துரைசாமி அய்யரின் குமாரர்களும் இதை ஒப்புக் கொண்டனர். மக்கிப்போன தாள்களின் மணம் மூக்கைத் துளைத்தது. சாதாரணமாக, இந்த மணம் எனக்கு ஒவ்வாதது. ஆதலால் முதல் நாளன்று. ஒரு வேலையாளை விட்டு குப்பை முதலியவற்றைப் பெருக்கியும் ஒட்டடை அடித்தும் அறையையும் அலமாரி களையும் துப்புரவு செய்தால்தான் நூல்களைப் பொருக்கி எடுக்க வசதியாக இருக்கும் என்று சொன்னேன். திரு. துரைசாமி அய்யரின் குமாரர்கள் (இப்போது அவர்களின் பெயர்கள் கூட நினைவில் இல்லை; 22 ஆண்டுகள் ஓடி