பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன்கொடை நூல்கள் தேர்வு I i 3 விட்டன அல்லவா? உடனே இப்பணியை நிறைவேற்றுவ தாகவும் மறுநாள் என்னை வரும்படியும் கேட்டுக் கொண்டார்கள் . காலை ஒன்பது மணிக்கு உணவை முடித்துக் கொண்டு சென்றுவிடுவேன். தூசு புழுதி முதலியவற்றைத் தட்டி எடுப்பதிலும், நூல்களைத் திறந்து பார்த்து அவை பல்கலைக்கழக நூலகத்தில் இருக்கத் தகுந்தவையா? பழைய நூல்களைக் கட்டமைத்தால் தகுந்தவையாக அமையுமா? என்றெல்லாம் ஆய்ந்து எடுப்பதில் கால தாமதம் ஆயிற்று. தொடர்ந்து நான்கு நாட்கள் சென்று இருநூறு நூல்கட்கு மேல் தேர்ந்தெடுத்தேன். நாற்பது விழுக்காடுதான் தகுதியான நூல்களாக இருந்தன. இடை யில் மூன்று மணிக்கு ஒருமுறை காஃபி பானம் தந்தனர். மாலை 4 மணிக்குச் சிற்றுண்டி காஃபி வழங்கினர். நான்கு மணிக்கு மேல் திரும்பி விடுவேன். நான்காம் நாள் தேர்ந்தெடுத்த நூல்கட்குச் சிவப்பு பென் சிலால் எண்கள் இட்டுப் பட்டியலைத் தயாரித்துக் கெ: ண்டேன். நான் சென்னையில் வழக்கமாகத் தங்கும் இடம் பன்மொழிப் புலவர் திரு. வே. வேங்கடராஜுலு ரெட்டியார் இல்லம் (35, இராக்கியப்ப முதலியார் தெரு, மயிலை, சென்னை-600 004) உயர் நிலைப்பள்ளித் தமிழ்ப் பாட நூல்கள், இலக்கண நூல்கள், துணைப்பாட நூல்கள் இவற்றை வெளியிடும் எஸ். வாசன் கம்பெனியும் இந்த இல்லத்தில்தான் இருந்தது. இதற்கு இரவு பகலாக ஒயாது உழைக்கும் R. சக்கரவர்த்தி அய்யங்கார் மேலாளராக இருந்தார். இவர் அப்போது இலயோலா கல்லூரியில் பேராசிரியாக இருந்த R. சாரங்கபாணி அய்யங்காசின் திருத்தம்பியார். இவரைத் தவிர கோவிந்தன் என்ற முழு நேர எடுபிடி ஆளும் இருந்தான். இவர்கள் கர்ம வீரர்கள். இவர்களிடம் நான் தயாரித்த பட்டியலைத் தந்து நூல் களை இரண்டு மூன்று கட்டுகளாக அழகாகக் கட்டிக் தி-8