பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H 14 - நினைவுக் குமிழிகள்-4 கோணியால் தைத்து மூடி லாரியில் சேர்ப்பித்து மேற்படி லாரி பற்றுச் சீட்டைப்பெற்றுக் கொண்டு திருப்பதி வந்து சேர்ந்தேன், மூன்று நாட்களில் நூல்கள் பாதுகாப்பாகப் பல்கலைக்கழக நூலகத்திற்கு வந்து சேர்ந்தன. நூல்கள் வந்து சேர்ந்தமைக்குப் பல்கலைக் கழகத்திற்கு ஒர் அறிக்கை அனுப்பி வைத்தேன். நூலகரையும் நூல்களைப் பெற்றுக் கொண்டமைக்கு ஒர் கடிதம் அனுப்புமாறு செய்தேன். துணைவேந்தர் அவர்களை நேரில் சந்தித் து என் பயணத்தையும், நூல்களைப் பொறுக்கி எடுப்பதில் ஏற்பட்ட சிரமத்தையும், நூல்கள் கட்டமைக்கப் பெற்று நூலகத்திற்கு வந்து சேர்ந்த விவரங்களையும் தெரிவித் தேன். துணைவேந்தர் சாதிப் பற்றாளராக இருந்தாலும் பிறசாதியினரின் திறமையைப் போற்றுபவர். இவர் காலத்தில் பல்வேறு சாதியினர் பல்வேறு பணிகளில் பல்கலைக்கழகத்தில் இடம் பெற்றிருந்தனர். எல்லோருமே இவரிடம் நல்ல மதிப்பு வைத்திருந்தனர்.இவரும் எல்லோர் பாலும் நல்ல அன்பு காட்டினார். இவர் காலத்தில் பல்கலைக் கழகம் ஒரு சிறந்த குடும்பம்போல் இயங்கி வந்தது என்பதற்கு இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண் விடல்,' என்ற வள்ளுவர் பெருமான் கூற்றை நடைமுறையில் இவர் அற்புதமாகக் கையாள்வதை பலமுறை கண்டு மகிழ்ந்த துண்டு. 1. குறள்-517 (தெரிந்து வினையாடல்)