பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமிழி-171 15. இளைஞர் வானொலி வெளியீடு தமிழ் வளர்ச்சிக்காகத் தமிழக அரசின் மானியம் பெறுவதற்கென்று எடுத்த முயற்சியும் சரிப்பட்டுவர வில்லை. பிஎச்.டி.க்குப் பதிவு பெறுவதற்கு மேற்கொண்ட முயற்சியும் பலன் அளிக்கவில்லை. இதனால் அமைதியாக இருக்க வேண்டிய மனம் கலங்கியது. காரைக்குடியில் சிறுவர்கள் இருவரும் எப்படிப் படிக்கின்றனரோ என்ற கவலை வேறு சூழ்ந்து கொண்டது. சென்னைப் பல்கலைக் கழகத்திலோ தமிழ் எம்.ஏ., பயிற்றுவிக்கும் கல்லூரியிலோ பணி புரியும் வாய்ப்பு கூட கிடைக்கவில்லை. அழகப்பர் கலைக் கல்லூரியில் எம்.ஏ. படிப்புக்கு வழி ஏற்பட்டது. சென்னையில் எம்.ஏ., பயிலும் மாணாக்கர்கட்கு கல்லூரி sch & suffg. & ffologih (pso D (Inter-collegiate Teaching) நடைமுறையிலிருந்து வந்தது. பல்கலைக்கழக மானிய -ganew uqpub (University Grants Commission) @so; வற்புறுத்தியது. இதற்குப் பேராதரவும் தந்தது. இந்த முறையைக்கடைப்பிடிக்கும்திட்டத்தில் அழகப்பர் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் பணிபுரியும் எனக்கு வாரத்திற்கு 4 பொழுதுகள் (Periods) எம்.ஏ.க்கு மொழியியல் (Philology) கற்பிக்கும் வாய்ப்பினை அளிக்குமாறு கேட்ட வேண்டு கோளை யும் முதல்வர் அலெக்ஸாண்டர் ஞானமுத்து மறுத்துவிட்டாரே; அவ்வாய்ப்பு வழங்கப் பெற்றிருந்தால் பிஎச்.டி.க்காவது பதிவு செய்து கொண்டிருக்கலாமே. குடும்பத்தைப் பிரியாது வாழ்ந்திருக்கலாமே. வாழ்க்கை யில் எதிர்பார்க்கும் சாதாரண வாய்ப்புகளும் கிட்டாமல் போய் விடுகின்றனவே, ஏழுமலையானை நம்பித் திருப்பு திக்கு வந்தும் அவனும் கைவிட்டானோ என்ற ஐயத்திற்கு