பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xiii ஆந்திர மண்ணில் வாழும் தமிழ் மக்கள் தம் உள்ளப் புழுக் கத்தைத் தமிழ்த் தென்றலால் அகற்றிய பெருமைக் குரியவராகத் திகழ்கிறார் பேராசிரியர் ரெட்டியார் அவர்கள். "ஆசிரியர்கள் நல்ல நூல்கள் எழுதவேண்டும். எழுத்துப் பழக்கத்தைத் தொடக்கத்திலிருந்தே வளர்த்துக் கொள்ள வேண்டும். பல நூல்களைப் படித்த வண்ண மிருந்து தம் அறிவினைப் பெருக்கிக் கொள்ளவேண்டும். அதிகம் சிந்திக்கவேண்டும். இந்தச் சிந்தனையால் தாம் எழுதவேண்டிய பொருள் மனத்தில் உதயமாகும். நல்ல முறையில் மாணாக்கர்கட்குக் கற்பித்து வந்தால் தாமெழுதும் எழுத்திலும் தெளிவு பிறக்கும். உரை நடையும் ஆற்றொழுக்காக அமையும்’ (பக். 34) என்றதம் கொள்கைக்கு ஏற்பப் பேராசிரியர் தொடக்கக் காலத்திலிருந்தே எழுத்துப் பணியைக் கண்ணெனப் போற்றி வந்திருப்பதை இந்நூலில் (குமிழிகள் 163, 164, I 67, 171, 3 73, 173, 179, 185, 387, 197, 19 2, 193, 194 212, 215, 224, 228, 230) நன்கு அறிகிறோம். திருப்பதியில் வாழ்ந்த பதினேழு ஆண்டுகளில் இருபது நூல்கள் எழுதியுள்ளார். இவர் எழுதிய சிறந்து நூல்கள் பல, மாணவர்களாகிய எங்கட்கு வகுப்பறையில் பல ஆண்டுகளாகப் பாடமாகச் கற்பிக்கப்பட்டவை. ஆழ்ந்து சிந்தித்துக் கட்டுரைகளை எழுதுவார். எழுதிய கட்டுரை களைத் தாம் படித்துப் பார்த்து, மாணவர்க்கும் ஆசிரிய ரனை வர்க்கும் படித்துக் காட்டி இன்புறுவார். குறை நிறைகளை எடுத்துச் சொல்லுமாறு கேட்பார். இத்த கைய சிறந்த பண்புகளைக் கொண்டது. இவருடைய எழுத்துப்பணி. இவருடைய வாழ்நாள் எண்ணிக்கை யைவிட (74) இவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை (88) மிகுதியிலேயே, இவர் மெய் வருத்தம் பாராக் கருமமே கண்ணாயிரைானார் என்பது நன்கு விளங்கும். இந்நாட்களில் நூல்களை எழுதும் சிலர் தாமெழுதிய நூல்களைத் தமக்கு மிகவும் வேண்டியவர்க்கோ,