பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* I 6 நினைவுக் குமிழிகள் : இடம் கொடுத்து விட்டானே... என்றெல்லாம் சிந்தித்துச் சிந்தித்து என் மனம் கவலைக் கடலில் ஆழ்ந்தது. இந்தக் கவலையைப் பணி செய்து அதில் மறக்க நினைத்தேன். குடும்பப் பொறுப்பு இல்லாததால் உறங்கும் நேரம் போக எல்லா நேரத்தையும் பணியிலே தானே கழிக்க வேண்டும்? பிஎச்.டி.க்கு எப்படியாவது பதிவு பெற. முடியும் என்ற மன உறுதி மட்டிலும் இருந்து கொண்டி ருந்தது. ஆழ்வார் பாசுரங்களைத்தான் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறுதியிட்டுக் கொண்டமையால், காலையிலும் மாலையிலும் ஆழ்வார் பாசுரங்களில் ஆழங்கால் பட்டேன். காஞ்சி பிரதிவாதி. பயங்கரம் அணைங்கராச்சாரிய சுவாமிகளின் திவ்வியார்த்த தீபிகையும் திரு. பு:ரா. புருடோத்தம நாயுடுவின் திருவாய் மொழி ஈட்டின் தமிழாக்கமும் கருவி நூல்களாகப் பயன் பட்டன. ஆசாரிய சுவாகிகள் எனக்கு மானச குருவாக நின்று விளக்கியருளினார்கள். ஐயம் வரும்போதெல்லாம் இன்றியமையாத நிலையில் ஐயத்தை அஞ்சலட்டையில் சுருக்கமாக எழுதியனுப்புவேன்; மறு தபாலில் அஞ்ச லட்டை மூலமே ஐயத்தைத் தெளிவாக்குவார்கள். இந்தச் செய்தியை எப்படியோ அறிந்த வைணவப் பெரியார் செவந்தாம்பட்டி பெ. இராமாநுசம் என்பார் என் மணி விழா மலரில், தன்னிலைமை தானறியாத் தன்மையாளன் சாதிவெறி சமயவெறி சற்று மில்லான் துன்னியநல் சைவகுலத் தோன்ற லேனும் துயதிருக் கச்சிநகர் அண்ணங் கரராம் மன்னியவாச் சாரியரின் மலர்த்தாள் போற்றி வைணவத்தின் வளமனைத்தும் உணரப் பெற்றோன் பன்னியதை ஏட்டினிலே பரவச் செய்தான் பலவுரைத்தேன்? அவன்திறனைப் பகரல் ஆற்றேன்:. 1. மணிவிழா மலர்-பக்கம் 25.