பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளைஞர் வானொலி வெளியீடு 1 1 7 என்று குறிப்பிட்டு மகிழ்கின்றார். இப்பாடல் முற்றிலும் தன்மை நவிற்சியணியாக அமைந்ததைக் கண்டு நானும் மகிழ்கின்றேன். இஃது இப்படியே எனக்கு ஆசியாகவும் நின்று இறைபணியும் இலக்கியப் பணியுமாக ஆற்ற ஏழு மலையான் துணை நிற்பான் என்று நம்புகின்றேன். காரைக்குடியில் தொடங்கிய அறிவியல் பணியை மேற்கொள்ளத் துணிந்தேன். எனக்குத் தேவையான அறிவியல் நூல்களை சென்னை அமெரிக்க நூலகம் அனுப்பி உதவியது. சிறுவர்கட்கு விளக்கமாக இருக்கும் பொருட்டு இளைஞர் வானொலி என்ற ஒரு சிறிய நூலை எழுத தொடங்கினேன். உலக முன்னேற்றத்திற்கு அறிவியல் மிகமிக இன்றியமையாதது என்று சொல்லத் தேவை இல்லை. அது பல துறைகளாகப் பரந்து உள்ளது. இது வியத்தகு ஆற்றல் படைத்தது, மிகப் பரந்து கிடக்கும் இவ்வுலகின்கண் நடைபெறும் நிகழ்ச்சிகளை இருந்த இடத்திலிருந்தே அவ்வப்போது கேட்டு மகிழவும், அறிவு பெறவும், பல நாடுகளுடன் உறவு கொள்ளவும் உறுதுணை செய்வது வானொலியாதலால் இதனை முதவில் விளக்கத் துணிந்தேன். காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான் காஞ்சியிற் கேட்பதற்கோர் கருவி செய்வோம்.” என்று பாரதியார் கண்ட கனவு நனவாகி விட்டதை முதலில் எழுதத் துணிந்தது பொருத்தந்தானே. இம்மாதிரியான அறிவியல் நூல்களை, அதுவும் சிறுவர்க்காக எழுதப்பெறும் நூல்களைப் படைப்ப தென்பது எளிதான செயலன்று. இந்த நூல் உருவாகும் காலத்தில் சிறார்கள் உயர்நிலைப் பள்ளிகளில் 10-11வது வகுப்புகள்வரைப் பொது அறிவியலைத் தமிழில் படித்து 1. மணிவிழா மலர்-பக்.25 2. பா. க. பாரததேசம்-7.