பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II & . நினைவுக் குமிழிகள் கி வந்தனர். சற்று வளர்ந்தவர்களிடமும் செய்திகளை அறிந்து கொள்ளவேண்டும் என்ற விடுப்பூக்கம் (Instinct of Curiosity) துடித்து நின்ற காலம். தமிழ் வார பிறை, திங்கள் இதழ்களும் செய்தித் தாள்களும் மக்களிடம் படிக்கும் பழக்கத்தை வளர்த்தன. தமிழகமெங்கும் ஆங்காங்கு அரசினால் தோற்றுவிக்கப் பெற்ற நூலகங் களும், தனியாரால் தொடங்கப் பெற்ற வாசக சாலைகளும் பணவசதி படைக்கப் பெறாத ஏழைகளுக்கும் படிக்க வசதியையும் வாய்ப்பையும் நல்கின. இத்தகைய வாசகர் களும் நூல் நிலையங்களும் யான் எழுதும் நூல்களை தக்க முறையில் பயன்படுத்திக் கொள்வர். கொள்ளும் என்று. நினைத்தே இவ் வரிசை நூல்களை எழுதத் துணிந்தேன் இத்தகைய வாசகர்களின் மனநிலை அடிப்படை. அறிவு முதலியவற்றை அறிந்து கொண்டுதான் நூல் அமைப்பினைத் திட்டமிடுதல் வேண்டும். எடுத்துக் காட்டாக இளைஞர் வானொலியைப் படிப்போர் வானொலி அலைகளின் இயல்புகள், மின்னாக்கப் பொறி செயற்படும் விதம், தாமஸ் ஆல்வா எடிசன், அலெக்ஸாந்தர் கிரஹாம் இவர்களின் பங்கு, மின்னோட்டத்தின் தன்மைகள், ஒலியின் தன்மைகள், வியத்தகு மின்காந்தம்.9 ஒலிபெருக்கி செயற்படும் விதம், ஒலிவாங்கியின் பல்வேறு அமைப்புகள், மின்னணுக்கள் செயற்படும் முறை. லெய்டன் ஜாடி, ஒத்த அதிர்ச்சி, சுருதி செய்தல், (Tuning) வாகன அலைகள், அதிசய வெற்றிடக் குழல்கள். நம்முடைய வானொலிப் பெட்டியின் அமைப்பு இவை பற்றிய சில அடிப்படையான கருத்துகளை சுவையுடன் வாசகர்கள் அறிந்து கொள்ளச் செய்தல் வேண்டும். இந்த அடிப்படைக்குப் பிறகுதான் வானொலி இயங்கு வதை விளக்குதல் வேண்டும். காட்சிப் பொருள் வடிவில் உள்ள துணைக் கருவிகளே குழந்தைகட்கு உற்சாகத்தை ஊட்டும்: , கவர்ச்சியையும் தரும். ஆனால் அறிவியல் நூல்கள் வரிவடிவங்கள்.