பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளைஞர் வானொலி வெளியீடு 翼蟹9壁 விளக்கப் படங்கள் போன்றவை ஏற்ற இடங்களில் ஏற்றவாறு அமையப்பெறின் நூல் கவர்ச்சியுடையதாக அமையும். இவை வண்ணப் படங்களாக இருப்பின் நூலின் கவர்ச்சி மேலும் அதிகமாகும். ஆனால் இளைஞர் வானொலியில் முப்பத்தைந்து சாதாரணப் படங்களே நன்முறையில் அமைக்கப்பெற்று விளக்கங்களும் தரப் பெற்றுள்ளன. நூலின் இறுதியில் கலைச்சொற்களின் விளக்கம் ஓரிரண்டு வாக்கியங்களில் சுருக்கமாகத் தரப் பெற்றுள்ளன. இந்த நூலை திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் (79, பிரகாசம் சாலை, சென்னை-600 108) ஏற்று வெளியிட்டது இந்நூலின் பெரும் பேறாகும். இன்றைய நிலையில் ஆசிரியரே மூலதனம் போட்டு வெளியிடுவது விரும்பத் தக்கதன்று. அப்படி அவர் வெளியிட்டாலும் விற்பனையுரிமை விற்கும் நிறுவனத் திடம் ஒப்படைத்து விடவேண்டும். ஆசிரியரே தம்வசம் படிகளை வைத்துக் கொண்டால், அவற்றைத் தக்க முறையில் பாதுகாக்க இயலாது. தவிர, விற்கும் படிகளை விட இலவசப் படிகளே வேகமாகப் போய்க் கொண் டிருக்கும். திருவேங்கடவன் அருளால் இந்நூல் நவம்பர் 1962-இல் வெளி வந்தது. இஃது எனது பன்னிரண்டாவது வெளியீடாகும் (கழக வெளியீடு). எந்த நூலை வெளியிட்டாலும் அவற்றை எவ்வகை யிலேனும் சமூகத்திற்குச் சேவை செய்யும் பெரியார் ஒருவருக்கு அன்புப் படையலாக்குவது என்ற மரபை வைத்துக் கொண்டிருந்தேன். இதற்கு முன் வெளி வந்த பதினொரு நூல்களைப் பதினொரு பெரியார்கட்கு அன்புப் படையலாக்கியுள்ளதை ஆங்காங்குச் சுட்டிக் காட்டி யுள்ளேன். இந்த நூல் எழுதி வெளிவந்த பொழுது பல்வேறு வகைகளில் பல்வேறு காரணத்தால் பெரும் பாலோர் உயர்நிலைப் பள்ளிக் கல்வி முடியும் வரைக்