பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翼琴剑 நினைவுக் குமிழிகள்-4 கட்டணம் இன்றிக் கல்வி பெற்று வந்தனர். ஒரு சிறு பகுதியினர் எந்த விதத்திலும் சம்பளச் சலுகை பெறா திருந்தனர். இவர்களில் பெரும்பாலோர் ஏழையாகவும் இருந்தனர். இதை நன்குணர்ந்த "ஏழை பங்காளர் , அக்காலத் தமிழக முதல்வராக இருந்த திரு. கே. காமராசர் எல்லோருக்கும் இலவசக் கல்வி கிடப்பதை நடைமுறைப் படுத்தினார். நான் திருப்பதியில் பணியாற்றினாலும், இவர் செய்த தொண்டு என் உள்ளத்தை மிகவும் கவர்ந்தது. தவிர, இப்பெருமகனார் ஏழை எளியவர்களின் கஷ்டங்களை நன்குணர்ந்தவர்; எவ்வகையிலேனும் அவர் கட்கு உதவக் கங்கணம் கட்டிக் கொண்டிருப்பவர். ஆகவே, இந்நூலை, அவர்தம் அறுபதாம் ஆண்டு நினைவின் மலராக, பயிர்காக்கும் உழவனென உயிர்கள் காக்கும் பான்மையிலே முதலமைச்சர்; வறியர் தாமும் மயல்போக்கும் கல்வியினால் மேன்மை பெற்று வாழ்வுபெற வழியமைத்தோன்; பார தத்தை உயர்வாக்க உழைப்பதிலே முதன்மைத் தொண்டர் ஒருநலமும் தாம் நாடார் காம ராசர் பெயர்வாழ்த்தி அவர்பிறந்த நன்னாள் வாழ்த்தி பெரிதுவந்து படைக்கின்றேன் இந்த நூலை. என்ற பாடல் மூலம் அன்புப் படையலாக்கி மகிழ்ந்தேன். இதனைக் கிடைத்தற்கரிய பேறாகவும் கருதினேன். -