பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமிழி-172 16. 'அதிசயமின்னணு நூல் அவதாரம் 'இளைஞர் வானொலி'யை அடுத்து என்ன் அறிவியல் எழுதவேண்டும் என்பது பற்றிய திட்டம் ஒன்றும் இல்லை. ஒரு நாள் வேழமுகத்தோன் என் மனத்தில் தோன்றினான். சிறு வயதில் பெரகம்பி என்னும் சிற்றுாரில் யான் திண்ணைப் பள்ளியில் பயின்ற பொழுது சில ஆண்டுகள் விநாயகர் அகவலாக என் நாவில் தாண்டவமாடி என் உள்ளத்தில் நிலையான இடம் பிடித்துக் கொண்டவனல்லவா? "உனக்கு நான் வழி காட்டுவேன். மின்னணுவியல் பற்றிய ஒரு சிறுநூலை எழுதுக. அஃது இளைஞர்கட்கு நன்கு பயன்படும்' என்று சொல்லி மறைந்தது போன்ற ஒரு மன நிலை. உடனே, அணுவிற் கணுவாய் அப்பாலுக் கப்பாலாய் கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி வேடமும் நீறும் விளங்க நிறுத்திக் கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை நெஞ்சக் கருத்தில் நிலையறி வித்துத் தத்துவ நிலையைத் தந்துஎனை யாண்ட வித்தக விநாயக விரைகழல் சரனே. என்று அவன் திருவடிகளைச் சரணம் அடைந்தேன். இஃது அறிவியல் ஊழி. கடந்த பல நூற்றாண்டுகளில் ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சியின் அளவைவிட இந்த நூற்றாண்டில் அதன் வளர்ச்சியின் அளவு மிக அதிகமாக