பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

渡湾器 நினைவுக் குமிழிகள்-4 ஏற்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளாக வாமனன் போலிருந்த அது திடீரென்று திரிவிக்கிரம அவதாரம் எடுத்துள்ளது. இன்னும் அதன் வளர்ச்சி எந்த அள விற்குப் போகும் என்று இப்பொழுது சோதிடம் கூறுவதற். கில்லை. நேற்று கண்டறியப் பெற்றவை இன்று "பத்தாம் பசவிகளாகப் போகின்றன. நேற்று ஆக்கின சோறு இன்று பழஞ்சோறு ஆகிவிடுகின்றது. இவற்றை யெல்லாம் கருத்தில் கொண்டமேனாட்டு அறிஞரொருவர் :இந்த நூற்றாண்டு கருத்துகள் வெடித்த காலம்’ என்று குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு விரைந்து வளர்ந்து வரும் அறிவியல் துறையில் ‘ưlsi sargpiestusò’ (Electronics) என்பது ஒரு பிரிவு: இயற்பியலைச் சார்ந்தது. இப்பிரிவில் 'மின்னணு (Electron) அலகிலா விளையாட்டுடையார் போல் புரியும் திருவிளையாடல்கள் எண்ணற்றவை, அத்திருவிளையாடல்களால் நாம் பெறும் நன்மைகளும் கணக்கிலடங்கா. இவற்றைச் சுருக்கமாக விளக்கும் முறையில் 'அதிசய மின்னணு என்ற தலைப்பில் ஒரு நூலைப்படைக்கத் திட்டம் இட்டேன். அணுக்களைக் காட்டிலும் நுண்ணிய பொருள்களும் உள்ளன என்பது அறிவியலறிஞர்கட்குத் தெளிவாயிற்று. எதிர் மின்னணு (Electron) என்பது மிகச் சிறியர்கள். நாம் கண்ணினால் காணக் கூடிய மிகச் சிறிய பொருள் களைவிடப் பல இலட்சக்கணக்கான அளவுகளில் சிறியது. இதை ஆற்றல் மிக்க நூண் பெருக்கியாலும் காண முடியாது. கோடிக்கணக்கான எதிர் மின் அணுக்களை ஒன்று சேர்த்தால்தான் ஒரு குண்டுசியின் தலையளவு இருக்கும். எதிர் மின்னணுவை மின்னணு என்றே வழங் கலாம். இஃது எதிர் மின்னூட்டத்தைக் கொண்டது. மின்னணுக்கள் உண்மையிலேயே மிக நுண்ணிய துகள்கள் அவை நகர்ந்து கொண்டே இருக்கும் தூய்மையான் மின் 1, விநாயகரகவல்-அடி (64.71).