பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிசய மின்னணு நூல் அவதாரம் 123; பொறிகள் ஆகும். அண்டங்கள் யாவும் ஒரு கதிரவனைச் சுற்றி இயங்குவதைப் போலவே மின்னணுக்களும் கதிரவன் போலுள்ள உட்கருவைச் சுற்றி இயங்குகின்றன. நம்முடைய பூமியைச் சூரியனிடமிருந்து தனியாகப் பிரிக்க முடியாது. உட்கரு என்ற கதிரவனிடமிருந்து மின்னணுக் களைப் பிரிக்கலாம். ஆனால் பிரிக்கும் முறையை அறியப் பன்னெடுங் காலம் ஆயிற்று. உட்கரு (Nucleus) என்பதும் மின்துகளாலானதே. இத்துகள்கள் மின்னணுக்களினின்றும். முற்றிலும் வேறானவை. ஒவ்வொரு மின்னணுவும் எதிர்மின்னூட்டம் கொண்டது என்பதை நாம் அறிவோம். ஆனால், உட்கரு வில் இருவகை மின்துகள்கள் அடங்கியுள்ளன. ஒருவகைத் துகள்கள் நேர் மின்னூட்டம் கொண்டவை; இவை கேர் மின்னணுக்கள் (Protons) என்று வழங்கப் பெறும். மற்றொரு வகை துகள்களிடம் யாதொரு மின்னூட்டமும் இல்லை: இவற்றை நடு நிலை மின்னணுக்கள் (Neutrons) என்று வழங்குவர், இந்த இரண்டு வகை மின் துகள்களும் இறுகிப் பிணைந்து கொண்டுள்ளன. இவ்வாறு பிணைந்து கொண்டுள்ள ஆற்றலுக்கு உலகிலுள்ள எந்த ஆற்றலையும் ஈடு சொல்ல முடியாது. இது புவியீர்ப்பு விசையைவிட இலட்சக் கணக்கான மடங்கு வலுவுடையது. இந்த இரண்டு வகைத் துகள்களைத் தவிர இருபதிற்கு மேற். பட்ட வேறு துகள்களும் இருப்பதாக அறிவியலறிஞர்கள் அறிந்துள்ளனர். ஆனால், அவர்கள் அவற்றைத் தனி யாகப் பிரித்து இன்னும் இனங் காணவில்லை. அவற்றின் செயல்களைக் கொண்டே அவற்றின் இருப்பினை மட்டிலும் அறிந்து கொண்டுள்ளனர். ஒர் உட்கருவும் அதனைச் சுற்றி இயங்கிக் கொண் டிருக்கும் எதிர் மின்னணுக்களும் சேர்ந்த அமைப்பே அணு (Atom) என்பது கதிரவனுடைய ஈர்ப்பு விசை தன்ன்னச் சுற்றிலுமுள்ள கோள்களைத் தம்முடைய