பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#24 நினைவுக் குமிழிகள்-4 நிலைகளிலிருந்து விலகாமல் இழுத்துப் பிடித்துக் கொண் டிருப்பதைப் போலவே, அணுவின் உட்கருவிலுள்ள நேர்மின் துகள்களும் எதிர் மி ன் னு ட் ட த் தைக் கொண்ட மின்னணுக்களை மிக வலுவாக இழுத்துப் பிடித்துக் கொண்டுள்ளன; இந்நிலை அவற் றைத் தம் நிலைகளிலிருந்து விலகாமல் இருக்கச் செய் கின்றது. உட்கரு ஒரு துவரை அளவு இருந்தால் அணு ஒரு மைல் குறுக்களவுள்ள உருண்டையாக இருக்கும். ஒர் அணுவின் எடை முழுவதும் அதன் உட்கருவிலேயே செறிந்து கிடக்கின்றது. எனவே, அணுவின் எடை என்பது உட்கருவின் எடையே. மின்னணுக்களுக்கு எடையே இல்லை. ஒரு நேர் மின்னணு ஒரு மின்னணுவில் கிட்டத்தட்ட ஆயிரத்தில் ஒரு பங்கு பருமனே இருக்கும். அதன் எடை மின்னணுவின் எடையைப் போல் 1840 மடங்கு அதிகம் இருக்கின்றது! செயற்படும் நிலையிலுள்ள மின்னணுக்கள் மின்னணு வாற்றல் (Electronic energy) என வழங்கப் பெறும். ஆனால் ஓரணுவில் இதனினும் வேறான ஒர் ஆற்றல் உள்ளது. இந்த ஆற்றல் வேறு விதமாகப் பயன்படு கின்றது. அணுவினைச் சிதைத்து இந்த ஆற்றல் வெளிப் படுத்தப்பெறுகின்றது. இஃது அணுவாற்றல் (Atomic energy) ayévsvs "2-L3505 surih psů” (Nuclear energy) grgar வழங்கப்படுகின்றது. மின்னணுக்களைப்பற்றிய அறிவியல் மின்னணுவியல் (Elecronics) ஆகும். இங்கு நாம் மின்னணுக்களைக் கட்டுப் படுத்திச் செயற்படச் செய்கின்றோம். பன்னெடு நாட்களாகச் செய்ய முடியாத பணிகள் யாவும் மின்னணுக்களால் செய்யப்பெறுகின்றன. மின்னணு வியலால் பரந்த வான்வெளியில் தொலைவிலுள்ள காட்சிகளைக் காண்கின்றோம்; இருண்ட நள்ளிரவில் கனமான எஃகு மூலமும் நம் கண்கள் சில பொருள் களைக் காண்கின்றன. அது பிணி நீக்கும் முறைகளில்