பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிசய் மின்னணு நூல் அவதாரம் 赛蕊 பணி புரிகின்றது. போர்களிலும் பெரும்பங்கு கொள் கின்றது. அது தொழிற்சாலைகளிலும் வேளாண்மைப் பண்ணைகளிலும் இல்லங்களிலும் வியத்தகு முறையில் ஏவல் கேட்டு நிற்கின்றது. எதிர்காலத்தில் அது விமானங் களையும் இரயில் வண்டிகளையும் தானியங்கிகளையும் (Automobiles) இயக்கி நம் பயணத்தை எளிதாக்கலாம்; நம் இல்லங்களிலும் பல்வேறு சேவைகள் புரியலாம். அஃது ஆயிரம் கைகளையுடை ஒருசேவகன் போல் அனைத்தையும் செய்யும் காலம் மிக அண்மையிலுள்ளது என்பதற்கு ஐயம் இல்லை. இவற்றையெல்லாம் விளக்கும் முறையில் 'அதிசய மின்னணு' என்ற நூலை அமைத்தேன். இதில் விடுதலை மின்னணுக்கள் மின்னணுக்குழல்கள், மின்னணுக் குழல் களின் பணிகள்,தொழில்துறையில் மின்னணு புரியும் வியத் தகு செயல்கள், ஒளிக்குழலகள் (Photo tubes) ஊர்க்காவ லர்கள் போல்பணிபுரியும் முறைகள் உடல்நலப்பாதுகாப்பில் மின்னணுவின் பணி, அறிவியல் ஆராய்ச்சிகளில் அது புரியும் அற்புதப்பணிகள், பாதுகாப்புத் துறையில் அது கொள்ளும் பங்கு போன்ற செய்திகள் எல்லாம் அடங்கும் முறையில் நூலை அமைத்தேன். நிமிடங்கள் தோறும் புத்தமைப்புகள் தோன்றி வருவதை-அறிவியல் உலகம் விரிந்து கொண்டு வருவதை-என் மனம், கணந் தோறும் வியப்புக்கள் புதிய தோன்றும்; கணந்தோறுப் வெவ்வேறு கனவு தோன்றும்; கணத்தோறும் நவநவமாம் களிப்புத் தோன்றும்; கருதிட வும் சொல்லிடவும் எளிதோ? : கவிஞன் வாக்கில் காண்கின்றது. காலத்திற்கேற்ற அரிய நூல்களை வெளியிட்டு வரும் கழகம் இந்த நூலையும் மனமுவந்து ஏற்றுவெளியிட்டது பொரதியார் : பாஞ்சாலி சபதம்-பாடல் 149