பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

泷然涉 நினைவுக் குமிழிகள்-4 (சூலை 1963), இந்த நூல் வெளிவந்த சமயம் நாடாளு மன்றத்தில் நண்பகல் உணவுத்திட்டத்தையும் சீருடைத் திட்டத்தையும் பாராட்டிப் பேசியதைச் செய்தித்தாள் களில் படித்து மகிழ்ந்தேன். இத்திட்டங்களின் தாயாகிய திரு. கெது.சுந்தரவடிவேலு அவர்களை தமிழ் கூறு நல்லுலகம் புகழ்ந்தது:இவற்றிற்கு முதலமைச்சர்காமராசர் ஆக்கமும் ஊக்கமும் தந்தமை மிகவும் பாராட்டத்தக்கது. கல்வி உலகில் ஜாம்பவான் போல் திகழ்ந்தவர் திரு. சுந்தர வடிவேலனார்.இவரால் தமிழக ஆசிரியர்களும் மாணாக்கர்களும் அடைந்த ஏற்றங்களும் நன்மைகளும் பலப்பல. இவருக்கு முன்னர் இருந்த கல்வி இயக்குநர்கள் மூலவராகவே காட்சியளித்தனர். இப்பெருமகனாரோ 'உற்சவராக இயங்கியவர்: தமிழ் நாடெங்கும்-பட்டி தொட்டிகளிலெல்லாம்-உலாவந்தார்; உ. லப் பி லா ஆனந்தமும் அடைந்தார். பல்வேறு நிலை மாணாக்கர்கள் சீருடையுடன் திகழ்வதை இவர்மனம் கண்டுகளித்திருக்கும், குளிர்ந்துமிருக்கும். கல்லூரிகளிலும் தமிழன்னை அரியணை ஏறுவதற்கு அல்லும் பகலும் ஒல்லும் வகை யெல்லாம் உவந்து பணியாற்றியதை உலகம் கண்டது. இவற்றையெல்லாம் உலகினோர் நினைவு கூரும் வகையில் இச்சிறுநூலை, நற்றவ வடிவாம் வள்ளுவன் கம்பன் நல்லிளங் கோவுயர் கபிலன் கொற்றமார் கீரன் பாரதி தங்கிக் குலவிய செந்தமிழ்த் தாயின் பற்றுறு வயிற்றில் திருவொடு தங்கிப் பண்பொடு தோன்றிய செல்வர் கற்றவர்க் கினியர், சுந்தர வடிவேல் கண்ணியர்க் குரியதிந் நூலே . என்ற பாடலால் அன்புப் படையலாக்கி மகிழ்ந்தேன். இஃது எனது பதின்மூன்றாவது வெளியீடாகும். (ஜூலை.