பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிசய மின்னணு நூல் அவதாரம் 賀2ア 1963)-இது கழக வெளியீடு. இந்த நூலுக்குப் பொது மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. குமிழி-173 17. தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை தோற்றம் பண்டைய இலக்கியங்களை ஏட்டுச் சுவடிகளிலிருந்து அழகிய முறையில் ஆராய்ச்சிக் குறிப்புகளுடனும் இன்றி யமையாத பின்னிணைப்புகளுடனும் வெளியிட்ட பெருமை டாக்டர் உ. வே. சாமிநாதய்யர், அவர்களைச் சாரும். ஈடும் எடுப்புமற்ற இப்பெரியாரைப் பதிப்பாசிரியச் சக்கரவர்த்தி என்று சொன்னாலும் மிகையாகாது.தமிழின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட பெருமை இவருடையது. இவரைத் தொடர்ந்து திரு. வி. கனகசபைப்பிள்ளை, பேராசிரியர் பி. சுந்தரம்பிள்ளை, திரு. பி. டி. சீநிவாச அய்யங்கார், பேராசிரியர் ரா. இராகவய்யங்கார், பேரா சிரியர் மு. இராகவய்யங்கார்,பேராசிரியர் கா. சுப்பிரமணிய பிள்ளை தவத்திரு. மறைமலையடிகள், தவத்திரு விபுலானந்த அடிகள் ஆகியோர் பண்டையதேமிழ் நாகரிகச் சிறப்பையும்,பண்டைய இலக்கிய நயங்களையும் அறிவுறுத் தினர். இவர்களைப் பின்பற்றிப் பல அறிஞர்கள் மறு மலர்ச்சியின் துரதுவர்களாய் அமைந்தனர். டாக்டர் கால்டுவெல் 'திராவிட மொழியினம்’ என்ற ஒரு பிரிவை உலகிற்குணர்த்தி அக்குழுவினுள் தமிழ் பண்டையப்பெருமையையும் புகழையும் இலக்கியப்பரப்பை யும் உடைய பண்பட்ட மொழி என்று காட்டினார். இவர்