பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 38 நினைவுக் குமிழிகன்-இ காட்டிய பாதையில் பலர் மொழியியல் துறையில் தம் கவனத்தைச் செலுத்தி ஆராயத் தொடங்கினர். சமயச் சிறைச்சாலையினின்றும் வெளிப்போந்து விடுதலை பெற்று மக்கள் புதிய அறிவுலகத்திற்குள் புகுங்காலம் தோன்றியது. ஆங்கில இலக்கிய அறிவும் மேனாட்டு அறிவியல் அறிவும் நமக்கு இப்புத்துணர்ச்சியை அளித்தன. இந்நிலையில் 1947-ஆகஸ்டுத் திங்கள் 15-ஆம் நாள் நமக்கு அரசியல் விடுதலையும் கிட்டியது; அந்நிய ஆட்சியினின்று விடு பட்டோம். இதற்கு முன்னர் ஏற்பட்ட பல்கலைக் கழகங். களாலும், புதிதாக நிறுவப்பெற்ற பல்கலைக் கழகங். களாலும் மக்கள் கல்வி பெருகிற்று. நம் நாட்டிலும் ஒரு புதுயுகம் தோன்றத் தொடங்கியது. இதுவே நம் நாட்டில் தோன்றிய மறு மலர்ச்சி ஆகும். மக்களின் மனப் பான்மை விரிந்து நவீன ஒளியைப் பெறவேண்டுமென்ற ஒர் உணர்ச்சித் துடிப்பு எம்மருங்கும் காணப்பெறுகின்றது. இந்த உணர்ச்சி இலக்கியங்களிலும் நிழலிடுகின்றது.பழைய கதைகளும், புராணங்களும்,பாட்டு களும் சுவையற்றுப் போயின, நவீன உணர்ச்சித் துடிப் புடன் கூடிய கவிதைகளும், புதினங்களும் சிறு கதைகளும் உண்டாகிப் பெருகி வருகின்றன. புதுக் கவிதை என்ற புதியதோர் கவிதை மரபும் தோன்றியுள்ளது. ஆங்கிலக் கவிஞர்களாகிய டி. எஸ். எலியட்டு, எஸ்ராபவுண்டு: போன்ற கவிஞர்கள் காட்டிய வழியில் தோன்றியது இப் புதுமரபு. நூற்றுக்கணக்கான புதுக்கவிதை நூல்கள் பல்கிப் பெருகி வருகின்றன. இன்று இளைஞர்களிடையே சங்க இலக்கியங்கள் மீது ஆராக்காதல் பிறந்துள்ளது. இதற்கு மறைமலை அடிகள் முக்கிய காரணமாவார். அவரைத் தொடர்ந்து பணியாற்றிய பலருள் பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை. ரா.பி.சேதுப் பிள்ளை.மு.வரதராசனார், கி. வா. ஜகந்நாதன் ஆகியோரும் குறிப்பிடத்தக்கவர்கள். கி. வா. ஜகந்நாதன் அவர்களின் சங்க நாற்காட்சிகள்’