பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை தோற்றம் 129 என்ற தொடரில் வந்த எட்டு நூல்களும், டாக்டர் மு. வரதராசனாரின் குறுந்தொகை, நெடுந்தொகை நற்றிணை விருந்துகளும் விளக்கங்களும் இளைஞர்களின் சங்க இலக்கியக் காதலுக்குத் தூண்டு கோல்களாக அமைந்தன. சென்ற பல ஆண்டுகளில் இதற்கு முத்தாய்ப்பு வைத்ததுபோல் பல மலிவுப் பதிப்பு நூல்கள் தோன்றிப் பல்லோர் கைக்கும். கிட்டியுள்ளன. இந்த மலிவுப் பதிப்பு நூல்களை உயர்ந்த முறையில் நல்ல அச்சுடன் பிழை களின்றி அதிகச் செலவினையும் பொருட்படுத்தாது அப்பொறுப்பினைத் தானே ஏற்றுக் கொண்டு வெளியிட்ட பெருமை திரு. எஸ். ராஜம் (முன்னாள் உரிமையாளர், முர்ரே கம்பெனி, சென்னை-600 001) அவர்களைச் சாரும். அவருடைய சீரிய தமிழ்ப் பணியைத் தமிழ்நாடு என்றும் மறக்காது நன்றிவுடன் போற்றும். இந்நிலையில் பண்டைப் பெருமையையுடைய தொல்காபபியம் என்ற இலக்கண நூலுக்கும் (சிறப்பாக எழுத்ததிகாரம், சொல்லதிகாரம்) கி. வா. ஜகந்நாதன் விளக்க, ஆராய்ச்சி நூல்களை வெளியிட்டுள்ளார். இந்தச் சூழ்நிலையில் நான் கரைக்குடியில் பணி யாற்றியபோது தொல்காப்பியப் பொருளதிகாரத்திற்கு எளிய விளக்க நூல் ஒன்று எழுதத் திட்டம் இட்டேன். 1953, 1954-இல் நான் காரைக்குடியில் இருந்தபோது பத்துக் கட்டுரைகள் எழுதினேன்: இவை அமுத சுரபி என்ற திங்கள் இதழில் வெளிவந்தன. அதன் பிறகு தமிழ் பயிற்றும் முறை, அறிவியல் பயிற்றும் முறை, கல்வி உளவியல் போன்ற கல்வித்துறை பற்றிய நூல்கள் எழுது வதிலும் வேறு திசைகளிலும் என் கவனம் சென்றதால் தொல்காப்பியப் பணி நின்றது. திருப்பதியில் பணியேற்ற பிறகு மீண்டும் தொல்காப்பியத்தில் என்கவனம் சென்றது. ஓர் இரண்டாண்டுக் காலத்தில்ஏனைய 24 கட்டுரைகளை யும் எழுதி முடித்தேன். பல சமயங்களில் இவை பல நோக்குடன் எழுதப் பெற்றமையான் இவற்றுள் தி-9