பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芷器姆 நினைவுக் குமிழிகள்-4 ஆங்காங்கே கூறியது கூறல் காணப்பெறும்; அவை விளக்கம் பற்றி வந்தனவாகக் கொள்ளல் வேண்டும். இவற்றையெல்லாம் தொகுத்து தோல்காப்பியம் காட்டும் வாழ்க்கை’ என்ற தலைப்பில் நூல் வடிவம் பெற்று. இந்தக் கைப்படியும் பழகியப்ப சகோதரர்களிடம் (வெளியீட்டாளர் கள்) இரண்டாண்டுகள் உறங்கிக் கிடந்தது. பின்னர் மார்ச்சு 1964இல் வெளிவந்தது. இஃது எனது பதி னான்காவது வெளியீடாக அமைந்தது. பல்லாண்டுகள் கழித்து வெளிவரும் இந்த நூல் தொல்காப்பியம்-பொருளதிகாரம் பயில்வாருக்கு ஒரு வழித்துணைபோல் அமையும்: ஏனையோருக்கும் தொல்காப்பியத்தைப்பற்றிய கருத்துகளை எளிதாகப் பெறுவதற்குத் துணையாக இருக்கும். இந்த நூலைப் பயில்வோர் கவிதை வாழ் க் ைகயி லி ரு ந் து மலர்ந்தது; அது வாழ்க்கைக்கே உரியது: வாழ்க்கைக் காகவே அது நிலை பெற்றுள்ளது' என்று கவிதையைப் பற்றி அட்சன் என்ற மேனாட்டுத் திறனாய்வாளர் கூறிய கருத்து ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியம்’ என்ற இலக்கண நூலுக்கும் பெரிதும் பொருந்துவதை அறியலாம். இந்த நூலை என் உள்ளம் எப்படி எப்படியெல்லாம் பகுத்துப் பார்க்க முனைந்தது என்பதையும் தெளியலாம். இந்த நூலுக்கு மூவர் அணிந்துரை, ஆங்கில முன்னுரை {Foreword), தமிழில் முன்னுரை (அறிமுகம்) அருளி யுள்ளனர். அவர்களைப் பற்றியான் என் நூல் முகத்தில் கூறியுள்ளதை இவண் கூறுவேன். பல்லாண்டுகளாகச் சென்னைப் பச்சையப்பன் கல்லூரித் தமிழ்த் துறையில் பெரும் பணியாற்றிக் கடந்த இரண்டாண்டுகளாகச் சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவராக இருந்து அத்துறையை அணி செய்யும் டா டர் மு. வரதராசனாரைத் தமிழ்கூறு 1. Hudson, W.H.: An Introduction to the Study of Literature-P-92