பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை தோற்றம் I 3 I தல்லுலகம் நன்குஅறியும். கடந்த இருபதுயாண்டுகளாக அவரை நான் நன்கு அறிவேன். பழைய பரம்பரைத் தமிழ்ப் புலவர்களையும் புதிய ப்ரம்பரைத் தமிழ்ப் புலவர் களையும் இணைத்து நிற்கும் பெரும் புலவர் அவர். பழமைக்குப் பழமையாய்ப் புதுமைக்குப் புதுமையாய் நின்று அறிவொளி வீசும் ஆசிரிய மணியாவார். உழைப்பி னால் உயர்ந்தமைக்குத் தமிழ்நாட்டு இளைஞர்கட்கு எடுத்துக் காட்டாக நின்று நிலவுபவர். இவருடைய எழுத்துகளில் புலமை மணம் கமழும். ஆராய்ச்சிதிறன் ஒளிரும். சிந்தனைச் சுடர் தெறிக்கும். இவருடைய கருத்து களில் ஆழ்கடலைப் போன்ற ஆழமும் உண்டு; அதனைப் போல அவை அகன்றும் காணப்பெறும். இலக்கியம், திறனாய்வு, ஆராய்ச்சி, மொழியியல், நாடகம், புதினம், சிறுகதை, கடிதங்கள் போன்ற பல்வேறு வகை இலக்கிய வகைகளை அணி அணியாக வெளியிட்டுத் தமிழன்னை யின் மகிழ்ச்சியைப் பொங்கச் செய்தவர்; தமிழ் ஆராய்ச்சி யும் தமிழில் புதிய இலக்கிய வகைகளைப் படைக்கும் ஆற்றலும் நிறைந்த இவரைத் தமிழ் நாட்டு பெர்னாட் ஷா என்று கூறினும் மிகையன்று. வல்லவர்; நல்லவர்; எவருட னும் இன்முகத்துடன் புன்முறுவல் காட்டி உரையாடும் பண்புடையாளர். பண்புடையார் பட்டுண்டு உலகம் , என்ற வள்ளுவர் வாழ்க்கைக்கு இலக்காக நிற்கும் உயர் குணச் செம்மல். தமிழ் மூதறிஞர் திரு.வி.க தமிழ் மக்களின் உள்ளத்தில் நான்கு எழுத்துகளில் நிலையாக வாழ்கின்றார். அவர்காட்டிய பாதையில் செல்லும் இவர் -மு.வ, என்ற இரண்டெழுத்துகளில் தமிழ் இளைஞர் களின் உள்ளத்தில் நிரந்தரமாக இடம் பெற்றுவிட்டார். இத்தகைய அறிஞர்' பண்புடையாளர்-எனது இந் நூலுக்கு அணிந்துரை அருளி ஊக்கியமைக்கு என் உளங் கனிந்த நன்றி என்றும் உரியது.” Tமூன்றாண்டுகட்கு மேல் மதுரைப்பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றி இன்று இவர் இல்லை. 10-10-1974 இல் சிவப்பேறு அடைந்து விட்டார்.