பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

五3& நினைவுக் குமிழிகள்-2 அடுத்து, ஆங்கில முன்னுரை அருளியவர் பேராசிரியர் அ. சீநிவாசராகவன். இவரைப்பற்றிய குறிப்பு: 'கடந்த பதினெட்டு யாண்டுகட்கு மேலாக இப்பேராசிரியரை நான் நன்கு அறிவேன். துறையூர் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியனாகப் பணியாற்றிய காலத்திலும் அதன் பின்னர் காரைக்குடி அழகப்பர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பேராசிரியனாகப் பணியாற்றிய காலத்திலும் முறையே ஆசிரியர் மாநாடுகளிலும் பல இலக்கியக் கட்டங்களிலும் கலந்து பழகியுள்ளேன். ஆங்கிலத்திலும் அருந்தமிழிலும் தேனுாறும் சொற்களால் இனிக்க இனிக்கப் பேசும் நாவீறு படைத்தவர். ஆங்கிலப் பேராசிரியரான இவர் அருந்தமிழை நன்கு கற்றவர். தமிழ் கூறு நல்லுலகம் எங்கும் உலாப் போந்து தமிழ்ப் பணியாற்றுபவர், சில்லாண்டுகள் சிந்தனை” என்ற திங்கள் இதழின் ஆசிரியராகப் பணியாற்றிய உயர்ந்த இந்தனையாளர். கம்பன் புகழ் பாடுபவர். பல தமிழ் நூல்களின் ஆசிரியர். தூத்துக்குடியில் கப்பலோட்டிய தமிழன் பெயரால் நிறுவப்பெற்ற கல்லூரியில் அது தோன்றிய நாள் தொட்டு அதன் முதல்வராகவும், பல்லாண்டுகள் சென்னைப் பல்கலைக் கழக ஆட்சிக் குழுவின் (Syndicate) உறுப்பினராகவும் பணியாற்றியவர் . என்னுடைய உழைப்பையும் வளர்ச்சியையும் நன்கு அறிந்து என் பணியில் என்னை மேன்மேலும் ஊக்கு வித்தவர், எவருடனும் எளிமையாகவும் உள்ளங்குழைந் தும் பழகும் உயர்ந்த பண்புடையாளர். இத்தகைய 2. முதன் முதலாக நாமக் கல்லில் நடைபெற்ற ஒர் மாவட்ட ஆசிரியர் மாநாட்டில் அவ்வூா கழக உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் திரு பி.ஆர். சுப்பிரமணியத்தால் அறிமுகமானவர் 1947-ல் என்பதாக நினைவு. 3. இவர் இன்று (ஏப்ரல் - 1990) இல்லை. பல்லாண்டுகட்கு முன்னரே வைகுந்தவாசியாகி, விட்டார்.