பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கைதோற்றம் I 33 பெரியார் இந்நூலுக்கு "ஆங்கில முன்னுரை' வழங்கி ஆசி கூறியமைக்கு என் உளங்கனிந்த நன்றி.' அடுத்து இந்நூலுக்குத் தமிழ் முன்னுரை' அருளியவர் பேராசிரியர் பு: ரா. புருடோத்தம நாயுடு” அவர்கள். இவரைப்பற்றிய குறிப்பு: திருவையாறு அரசர் கல்லூரி யில் பல்லாண்டுகளாகத் தமிழ்ப் பேராசிரியராகப் பணி யாற்றி நூற்றுக்கணக்கான மாணாக்கர்கட்கு உயர்ந்த முறையில் பாடம் சொல்லி அவர்கள் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு அவர்களைப் புலவர்களாக்கியவர். கடந்த பதினைந்து யாண்டுகட்கு மேலாகச் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையை அணி செய்பவர்கள். தமிழன்னைக்கு இவர் செய்துள்ள தொண்டு பொன் னெழுத்துகளால் பொறிக்கத் தக்கது. இவர்களால் தமிழன்னை பெற்ற செல்வம் ஒப்புயர்வற்றது. இறைவ னால் மயர்வற மதிநலம் அருளப்பெற்ற நம்மாழ்வார் அருளிச் செய்த திருவாய் மொழிக்கு மணிப்பிரவாள நடையிலுள்ள ஈடு என வழங்கும் முப்பத்தாறாயிரப் படியைத் (நம்பிள்ளை அருளிச் செய்த இது வடக்குத் திருவிதிப் பிள்ளையால் எழுதி வைக்கப்பெற்றது) தமிழாக்கிப் பத்துத் தொகுதிகளாகத் தமிழர்கள் கையில் கிட்டும்படி செய்த மேதை உண்மைத் தமிழ்த்தொண்டர். தமிழ்மொழி உள்ள அளவும் ஈட்டின் தமிழாக்கமும்’ நின்று நிலவும் என்பதற்கு ஐயம் இல்லை. இங்ஙனம் திருந்திய உளத்தை மாலடிக்காக்கிச் சேவையைத் தமிழ் மொழிக்காக்கிய பேராசிரியர் நாயுடு அவர்கள் அமைதி யான போச்கும் உயர்ந்த நெறியும் உடையவர்கள். உயர் திணை என்மனார் மக்கட் சுட்டே' என்ற தொல்காப்பி Tz. இவரும் இன்றில்லை. பல்லாண்டுகட்கு முன்னேரே ஆசாரியன் திருவடி நிழலை அடைந்து விட்டார். 5. சென்னைப் பல்கலைக் கழக வெளியீடுகள்