பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 நினைவுக் குமிழிகள்-சி பரின் இலக்கணத்திற்கு இலக்கியமாக-எடுத்துக்காட்டாக அமைந்தவர்கள். இத்தகைய பெரியார் என்மீது என்றும் கொண்டுள்ள கெழுதகை அன்பினால் எனது இந்த நூலுக்கு முன்னுரை' அருளி ஆசி கூறியதற்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்; இவருக்கு என் நன்றியும் வணக்கமும் உரியவை.” இந்தப் பெரிய நூலை திருவேங்கடவன் பல்கலைக் கழக முதல் துணைவேந்தர் பேராசிரியர் எஸ். கோவிந்த ராஜுலு காயுடு அவர்கட்கு, ஆங்கிலக் கலைஞன் சீர்த்துணை வேந்தன்: அன்பெனும் தேன்பொதி உளத்தன்; வேங்கடே சுவரன் பல்கலைக் கழக விளக்கினை மேதகத் துரண்டிப் பாங்குறு கலைமான் முகத்தொளி கண்டோன்: பண்புறு கோவிந்த ராசன் ஓங்குநற் புகழோன் திருவடி மலரில் ஒளிமணம் பெறுகஇந் நூலே. என்ற பாடலின் மூலமாக அன்புப்படையலாக்கி மகிழ்ந் தேன். இவரைப்பற்றி யான் நூல்முகத்தில் எழுதிய குறிப்பு இது: 'அறிவாலும் ஆற்றலாலும் ஒழுக்கத்தாலும் அத்தனைக்கும் மேலாகச் செயலாற்றும் திறனாலும் என் உள்ளத்தைக் கவர்ந்தவர்கள்- தமிழ்கூறு நல்லுலகிற்கு அறிமுகப்பட்டவர்கள்-உயர் திரு. எஸ். கோவிந்தராஜுலு, நாயுடு அவர்கள். பல்லாண்டுகளாகச் சென்னைச் சட்டக் கல்லூரியில் பேராசிரியராகவும் முதல்வராகவும் (பின்னர் சட்டத்துறை இயக்குநராகவும்) பணியாற்றித் தமிழ்நாடு. ஆந்திரம், கேரளம் ஆகிய மூன்றிலும் உள்ள பல்லாயிரக் கணக்காண மாணாக்கர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர்கள். இந்தியன் பீனல்கோட் என்ற சட்டத்தை இலக்கியம்போல் சுவையாகக் கற்பித்துப் 1.1ல ரை உயர்ந்த சட்ட நிபுணர்களாக்கியவர்கள்.