பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

夏、6 நினைவுக் குமிழிகள்-4 ψis offsir -osurrorso oré Gap (Inter-University Board) வின் தலைவராக இருந்து பல்கலைக் கழகக் கல்வியின் தரம் குறையாதிருக்கப் பாடுபடுபவர்கள், ஆந்திர மாநில சட்ட மேலவையில் உறுப்பினராக இருந்து அரசியலிலும் தம் ஆழ்ந்தகன்ற அநுபவத்தை வழங்குபவர்கள். ஆசிரியரின் தோன்றாத் துணையாகவுள்ள இத்தகைய பேரறிஞரின்பால் யான் கொண்டுள்ள பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் அறிகுறியாக இப்பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறையில் பணியாற்றும் சிறியேன் இந்நூலை அவாகட்கு அன்புப் படையலாக்கினேன். இவர்கள் ஆசி பால் இந்நூல் தமிழ்கூறு நல்லுலகத்தில் பெருமிதத்துடன் உலவும் என்பது என் திடமான நம்பிக்கை' இந்நூவின் மூன்றாவது பதிப்பு அண்மையில் வெளி வந்துளது. குமிழி-174 தீடீர் அதிர்ச்சி முக்கிய நிகழ்ச்சியென்று இப்போது திரு. நாயுடு வின் குமிழியிடுகின்றது. ஒரு சமயம் பேராசிரியர் துணை வேந்தர் ஆட்சிக் காலத்தில் ஒருநாள் மாலையில் பணி முடிந்து வீடு திரும்பும் நிலையில் முதல்வர் பதிவாளருக்கு அனுப்பிய கருத்துருவின் (Proposal) நகல் ஒன்று ன்னக்குக் கிடைத்தது. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் என் பணி முடியும் தருணம்: துணைவேந்தரின் பதவிக் காலமும் இன்னும் ஒருசில திங்களில் முடியும் நிலை. இக்கருத்துருவின் படி, தனியாக விரிவுரையாளராகப் பணியாற்றும் நான் தெலுங்குத் துறையின் கீழோ. வடமொழித் துறையின் கீழோ அமர்த்தப் பெற வேண்டும்' என்பது. எனக்கு இது 6. இவரும் இன்றில்லை. _ SV ஆண்டுகட்கு முன்னரே இறைவன் திருவடி நிழலை அடைந்து விட்டார்.