பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திடீர் அதிர்ச்சி I 8ኛ சிறிது அதிர்ச்சியைத் தந்தது; மனக்குமுறலை அடக்கிக் கொண்டு தங்கும் அறை வந்து சேர்ந்தேன்; மாலைக் கடன் களை முடித்துக் கொண்டு சிற்றுண்டி அருந்தி மீண்டும் அறைக்குத் திரும்பினேன்; இருப்பு கொள்ளவில்லை. எங்குப் போவது? ஒன்றும் தோன்றவில்லை . கோவிந்த ராஜ சுவாமியைச் சேவிக்கலாம் என்று அவன் சந்நிதியை நாடினேன். நான் திருப்பதிக்கு எதற்காக வந்தேனோ, அத்திட்டமெல்லாம் மறுநாள் முதல் நாசமாகப் போகின்றதே என்று வருந்தினேன். திக்கற்றவருக்கு தெய்வம்தானே துணை? சேயன் அணியன் என்சிந் தையுள் நின்ற மாயன் மணிவாள் ஒளிவெண் தரளங்கள் வேய்விண்(டு) உதிர்வேங் கடமா மலைமேய ஆயன் அடிஅல்லது மற்றுஅறி. யேனே." என்றும், திருவேங் கடம்மேய எந்தாய்! இனியான் உனை என்றும் விடேனே.” என்றும் நினைந்து கொண்டு கோவிந்தன் சந்நிதியை வந்தடைந்தேன். கோவர்த்தன மலையைப் பேர்த் தெடுத்து ஆயர் ஆநிரைகளைக் காத்த கோவிந்தனுக்கு என் இடரைக் களைய முடியாதா, என்ன? அதுவும் பைந்தமிழ்ப் பின் சென்ற பச்சைப் பசுங் கொண்டலாம்' ஏழுமலையான் திருவடிவாரத்தில் நிறுவப்பெற்று அவன் பெயராலேயே விளங்கும் பல்கலைக் கழகத்தில் தமிழ் வளர்க்கும் நோக்கத்துடன் வந்திருக்கும் அடியேனுக்கு வரும் இடர்கள், நான் செல்லும் வழியில் கிடக்கும் முட்டுக் கட்டைகள், பிறரால் உண்டாககப் பெறும் தடைகள் இவற்றையெல்லாம் களைவது அவன் பொறுப்பல்லவா? ஆகவே தான், கோவிந்தராஜுலு தாயுடுவின் மனத்தில் அந்தர்யாமியாக வீற்றிருக்கும் கோவிந்தன் இன்று மாலையில் பேராசிரியர் நாயுடுவால் 1. பெரி. திரு. 1.10:8 2. டிெ 1.10:9