பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 3 & றினைவுக் குமிழிகள்:4 போடப் பெற்ற தடையை நாளை காலையே நீக்குவான் என்ற அதிராத நம்பிக்கையுடன் அவன் சந்நிதியை நாடி வந்தேன். கண்ஆர் கடல்சூழ் இலங்கைக்கு இறைவன்தன் திண்ஆகம் பிளக்கச் சரம்செல உய்த்தாய்! விண்ணோர் தொழும்வேங் கடமா மலைமேய அண்ணா அடியேன் இடரைக் களையாயே. இலங்கைப் பதிக்கு அன்று இறையாய அரக்கர் குலம்கெட்(டு) அவர்மாள கொடிப்புள் திரித்தாய்! விலங்கல் குடுமித் திருவேங் கடம்மேய அலங்கல் துளப முடியாய்! அருளாயே. நீர்ஆர் கடலும் நிலனும் முழுதுண்டு ஏர்ஆ லம்இளந் தளிர்மேல் துயில்எந்தாய்! சீர்ஆர் திருவேங் கடமா மலைமேய ஆரா அமுதே! அடியேற்கு அருளாயே. உண்டாய் உறிமேல் நறுநெய் அமுதாக: கொண்டாய் குறளாய் நிலம்ஈர் அடியாலே; விண்தோய் சிகரத் திருவேங் கடமாமேய அண்டா! அடியே னுக்குஅருள் புரியாயே. தூண் ஆய் அதனுாடு அரியாய் வந்துதோன்றி பேணா அவுணன் உடலம் பிளந்திட்டாய்! சேண்ஆர் திருவேங் கடமா மலைமேய கோள் நா கணையாய்! குறிக்கொள் எனை நீயே.” என்ற பாசுரங்களை மனம் உருகக் கோவிந்தன் சந்நிதியில் சேவித்தேன், நம்பிக்கையுடன் 5Ո Ամ உள்ளத்தினால் எம். பெருமானைப் பிரார்த்தித்தால் அப்பிரார்த்தனை வீண் போகாதுஎன்பது என் இளம்பிராயம் முதற்கொண்டுநானே 3. பெரி திரு. 1.10:(1-5)