பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி டீர் அதிர்ச்சி ፲ 89 வகுத்துக் கொண்ட கொள்கை, சமய நூல்களும் இக் கொள்கையினையே பறைசாற்றுகின்றன என்பதை வயது முதிர்த்து கற்ற அறிவினால், அநுபவத்தால், இப்போது தெளிகின்றேன். அறிவு நடையாடாத இளம் பருவத் திலேயே தந்தையை இழந்த எனக்கு என் அன்னை ஊட்டிய நம்பிக்கை இது. அக்காலத்தில் காடன், மாடன், கருப்பண்ணசாமி, காமாட்சியம்மன், மதுரைவீரன், பிடாரி, மாரியம்மன் போன்ற சிறுதேவதைகளின் சந்நிதி கட்கு என்னை இட்டுச் சென்று வணங்கச் செய்ததுதான் என்பால் இந்நம்பிக்கையை வளர்த்தது. இப்போது ஆழ்வார் பாசுரங்களில் ஆழங்கால்பட்டு ஆய்ந்தபொழுது, தும்இன் கவிகொண்டு நும்மிட் டாதெய்வம் ஏத்தினால் செம்மின் சுடர்முடி என்திரு மாலுக்குச் சேருமே." என்ற பாசுரத்தால் நான் எக் கடவுளரை வழிப்ட்டுப் பிரார்த்தித்தாலும் அப்பிரார்த்தனை திருமாலைச் சென்று சேரும் என்பதை அறிகின்றேன். தவிர், துருவனுக் கும் பிரகலாதனுக்கும் அவர்தம் இளம் வயதிலேயே அருளிய பெம்மான் இவனன்றோ? அன்றிரவு மன அமைதியுடன் உறங்கினேன். அதிகாலையில் எழுந்து காலைக் கடன்களையும் நீராடலையும் சிற்றுண்டியையும் முடித்துக் கொண்டு சரியாகக் காலை ஏழரை மணிக்குள் முதல்வர் டாக்டர் பப்பாபதி ராவ் இல்லம் அடைந்தேன். இவர் பலிஜா வகுப்பைச் சேர்ந்தவராதலால் இவரை எவ்வளவுக் கெவ்வளவு தூக்கிவிடவேண்டுமோ அவ்வளவுக்கவ்வளவு தூக்கிவிட்டிருந்தார் துணைவேந்தர். முப்பத்திரண்டு அகவை நிரம்பும் முன்னரே பேராசிரியர்-துறைத் தலைவராக்கினார் (விலங்கியல்); ஒரு சில ஆண்டுகளில் 4. திருவாய். 3.9:6