பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

夏肇较 நினைவுக் குமிழிகள்-4 கல்லூரி முதல்வராகவும் உயர்த்தினார். அக்காலத்தில் வேறு சில துறைகளில் பணியாற்றுவோரையும் டாக்டர் சாவையும் ஒப்பிட்டு ஆய்ந்தால் சிறுவயது என்ற ஒன்றைத் தவிர, தகுதி, திறமை, அடக்கம் முதலிய எல்லாப் பண்பு களிலும் நிகரற்று விளங்கினார் என்றே சொல்லவேண்டும். பொறாமையினாலும் வேறு காழ்ப்பினாலும் பலர் பல்வேறு விதமாகப் பேசினாலும் இவரைப் பொறுத்த மட்டிலும் துணைவேந்தர் தகுதியற்றவருக்குப் பதவி கொடுத்தார் என்ற குற்றச்சாட்டு எள்ளளவும் பொருந்தாதது . காலை ஏழரை மணிக்குள் குளியல் முதலியவற்றை யெல்லாம் முடித்துக் கொண்டு டாக்டர் ராவ் படிப்பில் ஆழ்ந்திருந்தார். என்னைக் கண்டதும் இன்முகத்துடன் வரவேற்றார்; முகமலர்ச்சியுடன் உரையாடிக் கொண் டிருந்தார். காஃபி அருந்தச் செய்து வந்த காரணத்தை வினவினார். பெரும்பாலும் என் பதவிக்கு மேற்பட்ட பதவியிலிருப்பவர்களை அடிக்கடிச் சந்தித்து குலவி வழிபாடு செய்யும் பழக்கமுடையவன் அல்லேன். இதை டாக்டர் ராவும் நன்கு அறிந்திருந்தார். இதனால் தனிப் பட்ட மரியாதையுடன் பழகினார். தம்மைப் போல் என்னையும் சிறந்த உழைப்பாளி என்பதையும், அடக்க மான பண்புடையவன் என்பதையும், அகவையிலும் கிட்டத்தட்டப் பத்தாண்டுகள் மூத்தவன் என்பதையும் நன்கு அறிந்தவராதலால் இவ்வாறு பழகுவதற்குக் காரணம் என்பதையும் நான் நன்கு உணர்ந்தேன். முன்நாள் மாலையில் பெற்ற கருத்துருவின் காரணம் என்ன என்று வினவினேன். மிஸ்டர் ரெட்டியார், எனக்கு இதைப்பற்றி ஒன்றுந் தெரியாது. துணைவேந்தர் இப்படி ஓர் ஏற்பாட்டைத் திட்டமிட்டு அனுப்பச் சொன் னார்: அனுப்பினேன். இதற்கு மேல் ஒன்றையும் யான் அறியேன். அவர் திருஉள்ளத்திலிருப்பதை ஆண்டவன் தான் அறிவான். ஆகவே, அவரை நாடி உண்மை