பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திடீர் அதிர்ச்சி 141 நிலையை அறிந்து கொள்க. மணி 8.30 ஆகிறது. விரைந்து செல்க, குளிக்கப் போய் விடுவார்' என்று என்னை முடுக்கிவிட்டார். ஐந்தே மணித்துளிகளில் துணை வேந்தர் இல்லத்தை அடைந்தேன். முதல்வர் குறிப்பிட்ட படியே அவரும் குளியலறைக்குப் போகத் தயாராக இருந்தார். என்னைக் கண்டதும், இன்முகத்துடன் வரவேற்று வந்த காரணத்தை உசாவினார். எம்பெருமான் மீது பாரத்தைப் போட்டு துணிவையே துணையாகக் கொண்டு படபடப்புடன் பேசத் தொடங்கி யதைக் கண்டு அவரே அதிர்ந்து போனார். என்னை அவர் பதற்ற நிலையில் கண்டதே இல்லை. நான் : நேற்று மாலையில் ஒரு கருத்துருபற்றிய குறிப்பு (Memo) ஒன்றைப் பெற்றேன். இதன் அடிப்படைக் காரணம் புரியவில்லை. நான்காண்டுகள் தனியாக இருந்து பணியாற்றியமையால் நான் இழைத்த தவறுகள் GT 557 GðT ? துணைவேந்தர் : ஒன்றும் நீங்கள் தவறிழைக்கவில்லை. கல்லூரியிலேயே உங்கட்குத்தான் நல்ல பெயர். வகுப்பு எடுக்கும் நேரங்கள், சிற்றுண்டி நேரம் இவற்றைத் தவிர மீதி நேரங்களில் நீங்கள் நூலகத்தில்தான் இருப்பீர்கள் என்றும்,நேரத்திற்குள் கல்லூரிக்கு வந்து,நேரத்திற்கு முன் திரும்புவதில்லை என்றும் நான் பலர் வாயிலாகக் கேள்வி யுற்றிருக்கின்றேன். ஆந்திரப் பல்கலைக் கழகத்தில் ஒரு துறையில் ஒரே ஒரு விரிவுரையாளர் இருக்க நேர்ந்தால், அவரை ஏதாவது பொருத்தமான துறையுடன் சேர்க்கும் மரபு உண்டு. தில்லிப் பல்கலைக் கழகத்திலும் இம்மரபு இருந்து வருகின்றது. 5. இவர் இன்றில்லை. வேற்றுார் சென்று பணி யாற்றினார். அப்பொழுது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் நஞ்சுண்டு மாண்டார் என்ற செய்தி பரவியது.