பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ld 2 நினைவுக் குமிழிகள்-4 நான் : என் நியமனத்திற்கான பேட்டி சென்னையில் ழ்ேப்பாக்கம் ஆர்ம்ஸ் சாலையிலுள்ள தங்கள் இல்லத்தில் நடைபெற்று முடிந்த பின்னர் நான் தங்களை நான் தனியாக இருந்து செயற்படுவேனா? வேறு துறை யொன்றில் இணைப்பீர்களா? தமிழ்த் துறையில் எம்.ஏ., பிஎச்.டி முதலான வகுப்புகள் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்வீர்களா? வீடு தருவீர்களா? P. F, உண்டா? அல்லது ஒய்வு ஊதியத் திட்டம் உண்டா? என்றெல்லாம் வினாக் களை எழுப்பினேன். தாங்கள் 'எந்தக் குறையும் உங்கட்கு இருக்காது. எல்லா வசதிகளும் செய்து தரப் பெறும். வந்து பணியை ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்றீர்கள். அவற்றை இப்போது நினைந்து பார்க்க வேண்டுகின்றேன். மேலும், நான் தொடர்ந்தேன் : 'ஐயா இப்போது தெலுங்குத் துறைத் தலைவர் இலக்குமிகாந்தம் என்பவர். தெலுங்கு வெறியர். தமிழர்களைக் கண்டால் நஞ்சாகக் கருதுபவர். இவருக்குக் கீழ் நான் பணியாற்ற நேர்ந்தால் எத்தனையோ வீணான துன்பங்களையும் தொல்லை களையும் அநுபவிக்க நேரிடும். தற்செயல் விடுப்பு எடுப் பதற்கே ஆட்சேபணை இருக்கும். நான் துறை வளர்ச்சிக் காகப் பல்வேறு வழிகளில் முயல்வேன்; பல்கலைக் கழகத்திற்குக் கடிதங்கள் எழுத நேரிடும். அவற்றிற் கெல்லாம் தடைகள் போடுவார். ஏதாவது விளக்கம் சொன்னால் தமிழர்களே இப்படித்தான். எப்போதும் கச்சல் போடுவார்கள்’’ என்று குற்றப் பத்திரிகை வாசிப்பார் . என்மீது அடாவடியாகப் பல்கலைக் கழகத் தி ற்கு ஏதேனும் புகாரும் எழுதுவார். 'தெலுங்கர்’ என்று கருதி உங்கட்குப் பதவி தந்த ஆந்திர அரசே இப்போது உங்களைத் தமிழர்' என்று குற்றம் சாற்றுகின்றது. என்னைப் பற்றிய புகார் வந்தால் தாங்கள் தெலுங்கர்’ என்பதை நிலைநாட்ட என்னை