பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திடீர் அதிர்ச்சி 1 4 3 ஏமாளியாக்கி-பலிகிடாவாக்கி (Scape goal) - பிறர் பழி சுமப்பவராக்கி-விடுவீர்கள் என ஐயுறுகின்றேன். ' து. வே. : அப்படியொன்றும் நிகழ்ந்து விடாது. தைரியமாக இருங்கள். கான் : இப்படியெல்லாம் மானம் கெட்டுப் பணியாற்ற ஒப்பினால் நான் மதி கெட்டவனாவேன் என்பது உறுதி. காரைக்குடியில் புகழ் பெற்ற கல்லூரியொன்றில் பேராசிரியர் பதவியைத் துறந்து மூன்று மாதம் ஊதியம் தந்து விடுதலை பெற்று திங்களொன்றுக்கு ரூ. 1531இழப்பில் நான்காண்டுகளாகப் பணியாற்றி வருகிறேன்; சிறுவர்களின் படிப்பின் பொருட்டுக் குடும்பத்தை விட்டு வந்திருக்கின்றேன். பிஎச்.டி.க்குப் பதிவு செய்து கொள்ளவும் இசைவு மறுக்கிறீர்கள், ரூ. 153| இழப்பை ஈடு செய்யவும் ஒருப்படவில்லை. இந்த லட்சணத்தில் தெலுங்குத் துறையில் ஒரு தெலுங்கு வெறியருக்குக் கீழ் பணி புரியுமாறு ஆணையிடுகின்றீர்கள். இப்படியெல்லாம் துயரடைய வேண்டுமென்பது என் தலைவி தி (Fate) போலும்! தாங்கள் நேற்று அனுப்பிய குறிப்பின்படி நான் தெலுங்குத் துறையின்கீழ் இருக்கும்படி வற்புறுத்தினால் நான் பணியிலிருந்து விலகிக் கொள்ளவும் தயாராக உள்ளேன். உங்கள் கருத்தை அறிவதற்காகவே உங்களைச் சந்தித்தேன். நீங்கள் நான்காண்டுகள் நான் இருந்த நிலையில் என்னை வைத்திருக்க ஒருப்படாவிடில் சரியாகப் பத்து மணிக்கு முதல்வரிடம் பணியிலிருந்து விடுதலை தருமாறு விண்ணப்பம் தந்து விடுவேன். இங்குத் தெலுங்குத் துறையின்கீழ் அவமானத்தைப் பொறுத்துக் கொண்டு இருப்பதைவிட வேலை இழப்பால் ஊதியமின்றி மானத்துடன் வாழ்வது சிறந்தது. பின்னர் உங்கள் கட்டளை; என்பேறு.’’ இப்படி உருக்கத்துடன் கண்ணிர் கலங்கி வடியும் என் முகத்தைக் கண்டவுடன் மனம் உடைந்து போனார்